By: WebDesk
Updated: December 13, 2017, 12:56:12 PM
பெரும்பாலான குழந்தைகள் ஆறு வயதில் என்ன செய்துகொண்டிருக்கும்? பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். ஆனால், அந்த பொம்மைகளை வைத்தே ஆண்டுக்கு 70 கோடி சம்பாதிருக்கும் ஆறு வயது சிறுவன் ரியான் பற்றி உங்களுக்கு தெரியுமா?
’ரியான் டாய்ஸ் ரெவ்யூ’ என்ற பெயரில் யுடியூபில் சேனல் துவங்கி, அதன்மூலம் எல்லாவித பொம்மைகள் குறித்தும் விளக்குகிறான் சிறுவன் ரியான். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு பிடித்த சின்ன சின்ன செயல்பாடுகளையும் செய்து யுடியூபில் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறான் ரியான்.
இதன்மூலம், ரியான் ஃபேமஸ் மட்டும் ஆகவில்லை. யுடியூப் மூலம் ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான். உலகிலேயே 2017-ஆம் ஆண்டில் யுடியூப் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபர்களாக ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில், ரியான் 8-வது இடத்தை பிடித்திருக்கிறான். இதன் மூலம், மிகவும் பிரபலமான ‘சூப்பர் உமன்’ நிகழ்ச்சியை நிகழ்த்துபவரின் சாதனையையே முறியடித்திருக்கிறான். சூப்பர் உமன் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாவித பொம்மைகள் குறித்தும் தன் யுடியூபில் விளக்குகிறான் ரியான். ரயில் பொம்மை, சூப்பர் ஹீரோக்கள், டிஸ்னி பொம்மைகள், மினியன்ஸ் உள்ளிட்டவை குறித்தும் விளக்குகிறான். இதனால், உலகம் முழுவதும் குழந்தைகள் இவனுக்கு ரசிகர்களாகியுள்ளனர்.
குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் விளக்க வீடியோக்களையும் சிறுவன் ரியோ அற்புதமாக நிகழ்த்துகிறான்.
ரியானின் யுடியூப் சேனலை ஒரு கோடி பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். யுடியூபில் பெரும் ஹிட்டடித்த சில வீடியோக்களை காணுங்கள்.