/indian-express-tamil/media/media_files/2025/09/15/trump-putin-2025-09-15-10-33-08.jpg)
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இணையாக ஐரோப்பாவும் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அதற்கு எதிராக கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஐரோப்பா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது. அவர்கள் எண்ணெய் வாங்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அவர்கள் விதிக்கும் தடைகள் போதாது, நான் தடைகளை விதிக்க தயாராக இருக்கிறேன், ஆனால் அவர்கள் நான் செய்வது போல் தங்கள் தடைகளை கடுமையாக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
சனிக்கிழமையன்று, குடியரசுக் கட்சித் தலைவர் டிரம்ப், நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தி, அதற்கு எதிராகத் தடைகளை விதிக்க வலியுறுத்தினார். மேலும், உக்ரைன் போர் முடியும் வரை சீனப் பொருட்களுக்கு 50% முதல் 100% வரை வரி விதிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
சீனாவுக்கு ரஷ்யா மீது அதிக கட்டுப்பாடு இருப்பதாக குற்றம் சாட்டிய டிரம்ப், "நேட்டோவுடன் சேர்ந்து, சீனா மீதான 50% முதல் 100% வரிகளை, ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடிந்ததும் முழுமையாக வாபஸ் பெறுவது இந்த கொடூரமான மற்றும் அர்த்தமற்ற போரை முடிவுக்கு கொண்டு வர பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன்" என்று தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதினார்.
எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின்படி, நேட்டோ உறுப்பினரான துருக்கி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் மூன்றாவது நாடாகும். சீனா மற்றும் இந்தியா முதல் இரண்டு இடங்களில் உள்ளன. நேட்டோவில் உள்ள ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற மற்ற நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன.
ரஷ்ய எரிபொருள் வாங்கியதற்காக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 25% கூடுதல் வரி விதித்துள்ளது. ஆனால், சீனா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கியிருந்தாலும், அதன் மீது டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் மாஸ்கோவுக்கு எதிராக கூடுதல் வரிகளை விதிப்பதாக மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார், ஆனால் அவரது நிர்வாகத்தால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us