scorecardresearch

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் கிவ், செர்னிஹிவ், மைகோலைவ், கார்கிவ் ஆகிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் ஷெல் தாக்குதல் நடைபெற்றதாக அதிபரின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் தெரிவித்தார்.

உக்ரைனின் வடக்கு, தெற்கில் உள்ள நகரங்களில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய படைகள் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் உக்ரைன் அரசு ஈடுபட்டுள்ளது.

மக்கள் சாலையில் வந்து போராடுங்கள் என உக்ரைன் அதிபர் வலியுறுத்திய நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், போரானது கிவ்வில் தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் மட்டுமே முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகுதியில் கிவ், செர்னிஹிவ், மைகோலைவ், கார்கிவ் ஆகிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் ரஷ்ய படை தாக்குதலை தீவிரப்படுத்தியது. உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, கார்கிவில் குடியிருப்புப் பகுதிகளை மீது பீரங்கி டாங்க் தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி ஏவுகணை தாக்குதலில் டிவி கோபரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் 1.5 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இது 2 ஆம் உலக போருக்கு பிறகு, ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடி என ஐ.நா. அகதிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரத்தில் உணவு, தண்ணீர், மருந்து மற்றும் பொருட்களில் மிகவும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், காயமடைந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகள் 11 மணி நேரம் தற்காலிக போர் நிறுத்ததை ஒப்புக்கொண்டது. ஆனால், ரஷ்யா விரைவாக தாக்குதல் நடத்த தொடங்கியது, பாதுகாப்பு பாதையில் செல்ல தடை ஏற்பட்டது.

உள் துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ கூறுகையில், “பாதுகாப்பான பாதைகள் எதுவும் இல்லை. ஏனென்றால், ரஷ்யர்களின் பாதிப்படைந்த மூளை, எப்போது தாக்குதல் நடத்த வேண்டும், யார் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்கிறது” என்றார்.

ரஷ்ய மற்றும் உக்ரைன் தலைவர்களுக்கு இடையே மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்ய படை ஆக்கிரமித்துள்ள நகரங்களில் உள்ள மக்கள், அவர்களை எதிர்த்து போராடுங்கள் என உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார். வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ” நீங்கள் தெருவில் இறங்கி சண்டையிட வேண்டும். இந்த தீமையை விரட்ட, நீங்கள் நகரத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்றார்.

இதுதவிர, உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளை கேட்டுக் கொண்டார். ஆனால், உக்ரைன் விமானிகளுக்கு எப்படி அத்தகைய விமானத்தை அளிப்பது என்ற கேள்வியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது

உக்ரைனை சுற்றி காத்திருந்த ரஷ்ய படைகளில் 95 சதவீதம் தற்போது நாட்டிற்குள் இருப்பதாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளதாக கூறிய மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி, கிவ், கார்கிவ் மற்றும் செர்னிஹிவ் நகரங்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதின், இந்த தொடர் போருக்கு உக்ரைனை குற்றச்சாட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை துருக்கி குடியரசுத் தலைவர் ரெசெப் தையிப் எர்டோகன் கூறுகையில், போர் நிறுத்திட கிவ்வில் உக்ரைன் தாக்குதலை நிறுத்திவிட்டு, ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். மறுபுறம், உக்ரைன் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ரஷ்யா கூறுகிறது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், உக்ரைனியர்கள் அணு உலை மீது தாக்குதல் நடத்திவிட்டு, ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்ததாக எவ்வித ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டுகின்றனர் என்றார்.

மேலும், உக்ரைன் – ரஷ்யா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரண்டு கார்டினல்களை உக்ரைனுக்கு அனுப்பியதாக போப் கூறினார். ஞாயிற்றுக்கிழமை ஜெயபத்தில், உக்ரைனில் ரத்த ஆறும், கண்ணீர் ஆறும் ஓடுவதாக கூறினார்.

இந்த போரால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்த சரியான தகவல் இல்லை. இருப்பினும், சில நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக இங்கிலாந்து தெரிவிக்கின்றனர்.

மனிதாபிமான அடிப்படையில் திறக்கப்பட்ட சிறப்பு பாதையில் வெளியேறிய மரியுபோல் மக்கள் சிலர், சுமார் 430,000 பேர் கொண்ட நகரம் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளதாக கூறினர். வீடுகள் எரிந்து கிடக்கிறது. அனைத்து மக்களும் அடித்தளத்தில் தஞ்சமடைந்திருந்தனர். தகவல் தொடர்பு இல்லை, தண்ணீர் இல்லை, எரிவாயு இல்லை, தண்ணீர் இல்லை. அங்கே எதுவும் இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள், ரஷ்யாவின் இந்த தாக்குதல் முறையை செச்சினியா, சிரியாவில் பயன்படுத்திய மாஸ்கோ முறையுடன் ஒப்பிட்டனர். அங்கு மக்கள் வசிக்கும் நகரங்களில் விமானம் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி பேரழிவு ஏற்படுத்தியது.

இதற்கிடையில், உக்ரைன் டஜன் கணக்கான நாடுகளில் இருந்து தன்னார்வ போராளிகளின் சர்வதேச படையணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவின் கூற்றுப்படி, உக்ரைனில குறைந்தது 20 ஆயிரம் பொதுமக்கள் சண்டையிட முன்வந்துள்ளனர் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ரஷ்யாவிலும், ரஷ்ய நட்பு நாடான பெலாரஸிலும் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. டிக்டாக் நிறுவனம் ரஷ்ய பொதுமக்கள் புதிய வீடியோவை வெளியிடவும், மற்ற நாடுகளில் பதிவேற்றிய வீடியோக்களை பார்த்தற்கும் தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கான சேவையை நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளமும் நிறுத்தியுள்ளது. முன்னதாக, பேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு தடை விதித்திருந்தது.

அமெரிக்காவிற்கு எண்ணெய், எரிசக்தி பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்வது உட்பட, உலகப் பொருளாதாரத்தில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவது எப்படி என்பதை அமெரிக்க நாடாளுமன்றம் ஆராய்ந்து வருவதாக பாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Ukraine says russia steps up shelling of residential areas