Advertisment

அமெரிக்க தேர்தல் முடிவுகள் : வெள்ளை மாளிகையை நோக்கி நகரும் பைடன்

சர்ச்சைக்கு வழி வகுப்பதை காட்டிலும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும், அனைவருக்கும் நீதியையும் வழங்குவதே நம் அரசியல் கொள்கை - மக்கள் மத்தியில் ஜோ பைடன்

author-image
WebDesk
New Update
அமெரிக்க தேர்தல் முடிவுகள் : வெள்ளை மாளிகையை நோக்கி நகரும் பைடன்

US Election Results 2020 : Biden’s lead over Trump in Pennsylvania increases to nearly 29,000 votes : அமெரிக்க தேர்தல் முடிவுகளில் இன்னும் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பென்சில்வேனியாவில் வெற்றியை நிலை நாட்டியுள்ளார் பைடன்.  அதிபர் ட்ரெம்பை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று பென்சில்வேனியாவில் முன்னிலையில் உள்ளார் ஜோ பைடன். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி.

Advertisment

சட்டத்திற்கு புறம்பாக ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது -- ட்ரெம்ப் ட்வீட்

பென்சில்வேனியாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று தேர்தல் நடந்த அன்று இரவே ட்ரெம்ப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று அதிகாலையில், ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்கும் படி உரிமை கோர இயலாது. என்னாலும் உரிமை கோர இயலும். ஆனால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது தான் துவங்கியுள்ளது என்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.

தொடர் போராட்டங்களை நடத்தி வரும் ட்ரெம்பின் ஆதரவாளர்கள்

ஜோ பைடன் மற்றும் ஜனநாயக கட்சியினர் வெள்ளை மாளிகையை கொள்ளை அடிக்க முயல்கின்றனர் என்று கூறி ட்ரெம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கையில் துப்பாக்கிகளுடன் வலம் வருவது அங்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தபால் வாக்குகளின் எண்ணிக்கையால் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் ஜோ பைடன். இது அவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதால் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஃபீனிக்ஸ் மையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். மேலும் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பென்சில்வேனியாவில் முன்னணி வகுக்கும் ஜோ பைடன்

இந்த மகாணத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ட்ரெம்பின் வெற்றிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஜோ பைடன் அங்கு 49.6% வாக்குகளை (33,37,069) பெற்றுள்ளார். 28,877 வாக்குகள் பின் தங்கி டொனால்ட் ட்ரெம்ப் 49.2% (33,08,192)வாக்குகளை பெற்றுள்ளார்.

மக்களிடம் உரையாடும் ஜோ பைடன்

தற்போது அமெரிக்காவில் இரவு 11 மணியாகும். தற்போது மக்கள் மத்தியில் உரையாடி வருகிறார் ஜோ பைடன்.  நாம் வெற்றி பெற போகின்றோம். மீண்டும் ஒரு முறை ஜனநாயகம் தான் வெற்றி பெறும் என்பதை நாம் நிரூபித்திருக்கின்றோம். உங்களின் வாக்குகள் எண்ணப்படும். சிலர் எவ்வளவோ முயற்சிகள் செய்து வாக்கு எண்ணிக்கைகளை நிறுத்த முற்படுகின்றனர். ஆனால் அது நடைபெற விடமாட்டேன். அமெரிக்காவில் மறுப்புகளையும் எதிர்கருத்துகளையும் எப்போதும் கூற முடியும். சர்ச்சைகளுக்கு வழி வகை செய்யாமல் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, அனைவருக்குமான நீதியை வழங்குவதே நம் அரசியலின் நோக்கமாகும் என்று அவர் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள

Usa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment