ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கிடைக்கும் ’சிலந்தி பர்கர்’...செம்ம டேஸ்ட்.

உண்மையாகவே வெளிநாட்டு மக்கள் பாம்புக் கறி சாப்பிடுவார்களா? என்று ஆவலாக விசாரிப்போம்.

அமெரிக்காவில் உள்ள ஃபாஸ்புட் கடைகளில் இப்போது சிலந்தி பர்கரை தான் மக்கள் ஆவலுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். என்றால் நம்ப முடிகிறதா?

வெளிநாட்டில் பல்லி, பாம்பு, முதலை இவற்றை உணவாக சமைத்து சாப்பிடுவார்கள் என்று பெரும்பாலான நபர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம். அதே  போல் வெளி ஊர்களுக்கு சென்று வருபவர்களிடம் கூட  உண்மையாகவே வெளிநாட்டு மக்கள் பாம்புக் கறி சாப்பிடுவார்களா? என்று ஆவலாக விசாரிப்போம்.

அந்த வதந்திகள் பொய்யில்லை உண்மை தான் என்று  சமூகவலைத்தளங்களில் பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அந்த நாடெல்லாம் கட்டாயமாக ஜப்பான் அல்லது சீனா போன்ற நாடுகளாக தான் இருக்கும். தற்போது அமெரிக்காவிலும் அந்த கலாச்சாரம் பரவ தொடங்கியுள்ளது.

அமெரிக்க வாழ் தமிழர்கள் பலர்  அங்கு வசித்து  வருகின்றனர். அதே போல் இளைஞர்கள் பலரும் அமெரிக்காவிற்கு சென்று படித்தும், வேலைப் பார்த்தும் வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் அனைரையும் தற்போது ஒரு உணவு வெகுவாக கவர்ந்து வருகிறது என்றால் அது ’சிலந்தி பர்கர்’

நியூயார்க் நகரத்தில் இருக்கும் பிரபலமான ஹோட்டல் ஒன்று இந்த சிலந்தி பர்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த ஹோட்டலில் பாம்புக்கறி, முயல் கறி, மலைப்பாம்பு ஃபைரை என ஸ்பெஷல் மெனுவே உள்ளதாம்.  விடுமுறை தினங்களில் இந்த ஹோட்டலுக்கு செல்லும் பெரும்பாலனோர் கண்டிப்பாக இந்த சிலந்தி பர்கரை டேஸ்ட் பண்ணிட்டு தான் செல்வார்களாம்.

சிலர் மூன்று அல்லது நான்கு என்று அளவே இல்லாமல் வாங்கி வாங்கி சாப்பிட்டு சென்று,  ஃபேஸ்புக், ட்விட்டரிலும் தங்கள் அனுபவத்தை குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

 

×Close
×Close