Advertisment

ஆர்டிக் வனவிலங்குகளை பாதுகாக்க மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கிய அமெரிக்கா

ஐடா போன்ற வலுவான புயல்களை உருவாக்கும் காலநிலை மாற்றத்தில் இருந்து இந்த மசோதா உதவும் என கிரிஜால்வா அறிவிப்பு

author-image
WebDesk
New Update
ஆர்டிக் வனவிலங்குகளை பாதுகாக்க மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கிய அமெரிக்கா

protecting Arctic reserve from drilling : எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் பணிகளில் இருந்து தூய்மையான ஆர்டிக் வனவிலங்கு புகலிடத்தை பாதுகாக்க ஒரு பரந்த பட்ஜெட்டை ஒதுக்கி தி ஹவுஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் கமிட்டி வியாழக்கிழமை அன்று தாமதமாக சட்டம் இயற்றியது.

Advertisment

கடந்த வாரம் முதல் அமர்வை நடத்திய பிறகு மசோதாவின் மார்க்அப்பை இரண்டாவது நாளாக நீட்டிக்க, குடியரசுக் கட்சியினர் சுமார் 100 திருத்தங்களுடன் ஒரு ஜனநாயகவாதியும் குழுவின் தலைவருமான பிரதிநிதி ரவுல் கிரிஜல்வாவை கட்டாயப்படுத்திய பின்னர் 24-13 அளவுகளுக்கு குழு ஒப்புதல் அளித்தது.

குடியரசுக் கட்சியினர் கிரிஜால்வாவை மசோதாவின் பரிசீலனையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர், காங்கிரஸ் முதலில் ஐடா சூறாவளியிலிருந்து மீளவும் ஆப்கானிஸ்தானில் தலிபான் கையகப்படுத்தலில் கவனம் செலுத்தவும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினார்.

லூசியானா மாகாணத்தின் பிரதிநிதியான காரெட் க்ரேவ்ஸ் ஐடாவின் பின்விளைவுகளை சமாளிக்கின்ற போது குழுவில் இணைந்தார். அவர் மசோதா கடல் எண்ணெய் உற்பத்திக்கு தீங்கு விளைவிக்கும் என்றூ அவர் கூறினார். இருப்பினும் க்ரிஜால்வா இந்த மசோதா , இது ஐடா போன்ற புயல்களை வலுவாக்கும் மற்றும் ஆற்றல் மாற்றத்தில் வேலைகளை உருவாக்கும் காலநிலை மாற்றத்தை குறைக்கும் என்று கூறினார்/ அலாஸ்கா ஆர்டிக் நேஷனல் வைல்ட்லைஃப் ரெஃப்யூஜ் என்ற புகலிடத்தை பாதுகாக்க இந்த மசோதா உருவாக்கப்பட்டது என்றும் எதிர்கால எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடுதலில் இருந்து கண்டத்தை பாதுகாக்கும் என்று அவர் கூறினார்.

இது சிவிலியன் க்ளைமேட் கார்ப்ஸுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், பெரிய ஏரிகளை மறுசீரமைப்பு செய்யவும், காலநிலை மீட்பு திட்டங்களுக்காகவும் 9.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், கைவிடப்பட்ட ஹார்ட்ராக் சுரங்கங்களை சுத்தப்படுத்த 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் முதலீடு செய்கிறது.

இந்த சட்டம் ஒரு ஹார்ட்ராக் கனிம ராயல்டியை நிறுவுவதன் மூலம் பணத்தை திரட்டுகிறது, இது ஜனநாயகக் கட்சியினர் 10 ஆண்டுகளில் சுமார் 2 பில்லியன் டாலர்களை திரட்டலாம் என்று கூறுகின்றனர். புதைபடிவ எரிபொருள் ராயல்டி விகிதங்களை அதிகரிக்கிறது மற்றும் மீத்தேன் உமிழ்வுகளுக்கு ராயல்டி கட்டணத்தை நீட்டிக்கிறது.

ஜனவரி 6 அன்று டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ANWR க்கான முதல் குத்தகை விற்பனையை நடத்தியது, 22 டிராக்டுகளில் ஒன்பது மட்டுமே விற்கப்பட்டது மற்றும் பெரிய எரிசக்தி நிறுவனங்களால் வாங்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதை உற்சாகப்படுத்தினார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்காக தேசிய வனவிலங்கு புகலிடத்தை மக்களின் பணத்தின் மூலம் உருவாக்குவது மோசமான வணிகமாகும் என்று வனவிலங்குகளின் பாதுகாவலர் அலாஸ்கா திட்டத்தின் இயக்குனர் நிக்கோல் விட்டிங்டன்-எவன்ஸ் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Usa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment