Advertisment

இந்தியர்களை வெறுக்கிறேன்..!' தாக்குதல் நடத்திய அமெரிக்கப் பெண் கைது

Woman arrested in Plano, Texas after video of assault, racist slurs goes viral on social media Tamil News: இந்திய பெண்கள் மீது இனவெறித தாக்குதல் நடத்திய அமெரிக்க பெண் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
US police arrests woman for assault on Indians after video goes viral

A woman, who has now been arrested, is seen in the video identifying herself as a Mexican-American and assaulting a group of Indian Americans.

World news in tamil: அமெரிக்காவின் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருந்து இரவு உணவை முடித்து விட்டு வானகத்தில் புறப்பட தயாராக இருந்த இந்திய பெண்கள் மீது அமெரிக்க பெண் ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அவர், தான் இந்தியர்களை வெறுப்பதாகவும், அமெரிக்காவிற்கு வரும் அவர்கள், அங்கு சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள், ”என்றும் எப்-வார்த்தையைக் குறிப்பிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். கடந்த புதன்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, பின்னர் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அது இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது.

Advertisment

இதனையடுத்து, இந்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய பிளானோவின் எஸ்மரால்டா அப்டனைக் கைது செய்த பிளானோ நகர போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது தாக்குதல், உடல் காயம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 10,000 டாலர் பத்திரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மெக்சிகன்-அமெரிக்க பெண்ணான பிளானோவின் எஸ்மரால்டா அப்டன், நான்கு இந்திய-அமெரிக்க பெண்களைக் கொண்ட குழுவை இனவெறி மிகுந்த கடுஞ்சொற்களால் திட்டி, அவர்களை தாக்குக்கிறார். அதை அங்கிருந்த பெண் ஒருவர் வீடியோவாக பதிவு செய்கிறார்.

வாகன நிறுத்துமிடத்தில் நின்று கொண்டு சண்டையிடும் அந்த பெண் “நான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்த இந்தியர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள், ”என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லி எப்-வார்த்தையைக் கூறுகிறார்.

நான் … எங்கு சென்றாலும், நீங்கள் இந்தியர்கள் … எல்லா இடங்களிலும்” என்று அவர் திட்டுவதும் அந்த வீடியோவில் உள்ளது. "இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்திருந்தால், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்" என்றும் கூறி திட்டுகிறார். பிறகு திடீரென்று அங்கிருந்த நான்கு இந்தியப் பெண்களைத் தாக்கத் தொடங்குகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி, அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Viral Social Media Viral United States Of America Viral Video Viral News World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment