Advertisment

"ஈரானுக்கு எதிராக ராணுவம், ஏவுகணை பயன்படுத்த விரும்பவில்லை" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
US President donald trump address the public on tv about iran attack - "ஈரானுக்கு எதிராக ராணுவம், ஏவுகணை பயன்படுத்த விரும்பவில்லை" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

US President donald trump address the public on tv about iran attack - "ஈரானுக்கு எதிராக ராணுவம், ஏவுகணை பயன்படுத்த விரும்பவில்லை" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு அமெரிக்கா பின்னர் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

Explained: அணு ஆயுத ஒப்பந்த வரம்புகளை பின்பற்றுமா ஈரான் ?

இதனால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவிக்க உச்சக்கட்ட பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மக்களுக்கு ஆற்றிய உரையில், "ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரான் தாக்குதலில், அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவே பாதிப்பு ஏற்பட்டது. ஈரானின் அத்துமீறல் செயல்களை சகிக்க முடியாது. சுலைமானி எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்க முடியாது. அந்நாட்டின் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதார்த்தத்தை புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

8, 2020

அணு ஆயுத திட்டங்களை ஈரான் கண்டிப்பாக கைவிட வேண்டும். உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். உள்நாட்டில் மற்றுமல்லாது வெளிநாடுகளிலும் ஈரான் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு தேவையில்லை.

ஈரானுக்கு எதிராக ராணுவத்தை, ஏவுகணையை பயன்படுத்த விரும்பவில்லை. இறுதியாக அமெரிக்க மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில், உலகம் முழுவதும் அமெரிக்கா அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது"

என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அமெரிக்கா படைகள் வெளியேறுவதுதான் தீர்வு – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி

Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment