தந்தைக்கு பாடம் கற்பிக்க விபரீத செயலில் ஈடுப்பட்ட 12 வயது சிறுவன் !!!

சீனாவில் 12 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தையிடம் கோபித்துக் கொண்டு ஜன்னலில் படுத்து உறங்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய  நவீன உலகில்  வளரும் பிள்ளைகள்   எந்த நேரத்தில் எப்படி ரியாக்ட் செய்வார்கள்  என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்று.  தாய், தந்தையர்கள் திட்டியதால்  தற்கொலை செய்த பிள்ளைகளும் உண்டு.  எப்போதுமே அதிமான செல்லத்தை கொடுத்து விட்டு, பிற்காலத்தில் அவர்கள் செய்யும் தவறை கண்டித்தால்  அதை பிள்ளைகளால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனாலேயே பல வீடுகளில்,  பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் வெடிக்கின்றன.   இப்படி தான் சீனாவில் உள்ள அடுக்காடி  குடியிருப்பில் வசித்து வரும்,  ஒரு குடும்பத்தில்  சம்பவத் தினத்திற்கு முந்தைய நாள்  ஒரு சண்டை நடந்துள்ளது.  அவர்களின் 12 வயது மகன்  சோம்பேறித் தனமாக நடந்துக்  கொள்ளவதாகவும், காலையில் சீக்கிரம் படுக்கையில் இருந்து எழாமல் பகல் பொழுது வரை உறங்கி  கொண்டிருப்பதாக சிறுவனின்   தந்தை அவனை அடித்து , திட்டியுள்ளார்.

இதனால், கோபம் அடைந்த  அந்த சிறுவன், இனிமேல் நான் பெட்ரோமில் தூங்க போவதில்லை என்று கூறிவிட்டு அடுக்காடி குடியிருப்பின்  5 ஆவது மாடியில் உள்ள ஜன்னல் மேல் போய் படுத்து உறங்கியுள்ளான். சிறுவன் எப்படி ஜன்னல் மீது ஏறினால் என்பது எவருக்குமே  தெரியவில்லை.  சாலையில் சென்றவர்கள்  ஜன்னல் மீது இருந்த சிறுவனைப் பார்த்து  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

12 year-old boy sleeps on the top of security window because of being scolded by his father for sleeping in.

May 2nd, in Jiangkou, Guizhou, a 12 year-old boy sleeps on the top of security window because of being scolded by his father for sleeping in. Firefighters come in time and rescue the boy safely.

Posted by PearVideo on 3 मे 2018

சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், சிறுவனை பத்திரமாக மீட்டு எடுத்தனர்.  மேலும், அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது தந்தைக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துக் கொண்டதாக சிறுவன் கூறியுள்ளான்.  மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு  தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close