நம்பினால் நம்புங்கள்: பெண்களை போல் ’ஐ ஹீல்ஸ் ’ அணியும் ஆண்!

அஸ்லீம் தனது தங்கையோட ஐ ஹீல்ஸை போட்டுக் கொண்டு சென்றுள்ளார்.

ஒரு ஆண் தினமும், தன்னுடைய அலுவலகத்திற்கு  தினமும், பெண்கள் அணியும்  ஐ ஹீல்ஸ்களை அணிந்து செல்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

”தினமும் நான் என்னுடைய அலுவலகத்திற்கு ஐ ஹீல்ஸ் தான் அணிந்து செல்வேன். இதில் வெட்கப்படவும், ரகசியமாக சொல்லவும் எந்த அவசியமும் இல்லை” இப்படி  கம்பீரமாக பேசுபவர் தாம் அஸ்லீ மேக்ஸ் வெல் லேம்.  உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றின் பொருளாதார ஆலோசகராக இருக்கும் இவர், கடந்த 1 ஆண்டுகளாக தனது அலுவலகத்திற்கு 6 இன்ச் ஐ ஹீல்ஸ்களை அணிந்து செல்கிறார்.

இவரின், ஆடை வடிவமைப்பாளரோ இவருக்கும் ஷூவை விட ஐ ஹீல்ஸ்கள் தான் பொருத்தமாக இருப்பதாகவும்  கூறினாராம். ஒரு நாள் அலுவலகத்திற்கு கிளம்பிய சமயத்தில்,  அஸ்லீமின் ஷூவை காணவில்லையாம். மீட்டிங் ஒன்றிற்கு அவசரமாக செல்ல வேண்டிய நிலை என்பதால், அன்று அஸ்லீம் தனது தங்கையோட ஐ ஹீல்ஸை போட்டுக் கொண்டு சென்றுள்ளார்.

அன்று, ரோட்டில் சென்ற அனைவரும் அவரின் நடையையும், அவரின் ஹீல்ஸையும் திரும்பி திரும்பி பார்த்துள்ளனர். அந்த பார்வை அஸ்லீமிற்கு, மிகவும் பிடித்து விட்டததால், மறுநாளில் இருந்து அவர், ஐ ஹீல்ஸ் போடுவதை பழகமாக மாற்றிக் கொண்டுள்ளார்.  அன்றிலிருந்து இன்று வரை எங்கு சென்றாலும் அஸ்லீம் பெண்களை போல் 6 இன்ச் அளவுள்ள ஐ ஹீல்ஸை தன் போட்டுக் கொண்டு செல்வாராம். வெளிநாட்டில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு சத்தியம்.

இதுவரை அஸ்லீம்மை உள்ளூர் தொலைக்காட்சிகள் பலர் பேட்டி கண்டுள்ளனராம்.

 

 

 

×Close
×Close