மாப்பிள்ளை இவர் தான்....ஆனா அவர் அணிந்திருக்கும் டை, ஷூ பற்றி கேட்காதீங்க!!!

நடைப்பெற்ற திருமணம் ஒன்றில், மாப்பிளையின் ஆடை மற்றும் ஷூ விற்கே 25 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.

பாகிஸ்தானில் நடைப்பெற்ற திருமணத்தில்,  மணமகனை பார்த்து அனைவரும் பொறாமை படும் அளவிற்கு  ஒரு நிகழ்வு  நடந்து முடிந்துள்ளது.

திருமணம், என்றாலே பலருக்கும் பல கனவுகள் இருக்கும். அவர்கல் அணியும் ஆடையில் தொடங்கி  சாப்பாடு, வரவேற்பு, ஆட்டம், பாட்டம் என எல்லாமே பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசை. ஆனால் அவர்களின் வசதி வாய்ப்பிற்கு ஏற்றவாறு அவரவர்கள்  திருமணம் நடைபெறும்.

எந்த திருமணமாக இருந்தாலும்,  மாப்பிளையை விட  பெண்களின் ஆடைகள், அணிகலன்கள், மேக்க அப்பிற்கு தான் அதிகம் செலவாகும்.  ஆனால் பாகிஸ்தானில் அப்படியே இதற்கு நேர் எதிர் மறையாக நடந்துள்ளது. அங்கு நடைப்பெற்ற திருமணம் ஒன்றில், மாப்பிளையின் ஆடை மற்றும் ஷூ விற்கே 25 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.

ஷூ என்றால் சாதரணாமான  ஷூ இல்லை. எல்லாமே தங்கத்தில் ஆனது. அன்றைய தினம் மாப்பிளை அணிந்திருந்த  கோட் ஷூட்டின் விலை ரூ 63,000,  கோட் ஷூட்டிற்கு மேட்சாக அவர் அணிந்திருந்த தங்க டையின் விலை ரூ. 5 லட்சம்,  அடுத்ததாக அவர் அணிந்திருந்த ஷூவின் விலை ரூ. 17 லட்சம். இவை அனைத்தும் முழுக்க முழுக்க தங்கத்தில் செய்யப்பட்டு மாப்பிளைக்கு மணமகள் வீட்டார் அளித்துள்ளனர்.

இவர்களின் திருமணத்திற்கு வந்த அனைவரும்  மாப்பிளையின் பிரமாண்டத்தைப் பார்த்து  வாய் அடைத்து போயினர்.   அதுமட்டுமில்லாமல்  மாப்பிளை ஒரே நாளில் பாகிஸ்தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.

×Close
×Close