உலக வங்கியின் தலைவர் ஜிம் ராஜினாமா... புதிய தலைவரை தேர்வு செய்ய ட்ரெம்ப் முடிவு...

ஜிம்மின் பதவி விலகலுக்குப் பிறகு இடைக்கால தலைவராக க்றிஸ்டலினா ஜார்ஜிவா செயல்படுவார்

World Bank Group President Jim Yong Kim : உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வரும் ஜிம் யாங் கிம் வருகின்ற பிப்ரவரி 1ம் தேதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 2011ம் ஆண்டில் பதவியேற்ற அவரின் பணிக்காலம் 2015ம் ஆண்டு முடிவடைந்தது.

2011ம் ஆண்டு இந்த பொறுப்பிற்கு வந்த ஜிம்மின் பதவிக்காலம் 2016ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவால் முன்னிறுத்தப்பட்டார் ஜிம்.

World Bank Group President Jim Yong Kim :

58 வயதான ஜிம்மின் பணிக்காலம் 2022ம் ஆண்டு வரை நீடிக்கிறது. ஆனால் அதற்கு முன்பே பணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் “இவ்வளவு மகத்தான பொறுப்பில் பணியாற்றியாது எனக்கு மிகப் பெரிய கௌரவமாக நான் நினைக்கின்றேன். என்னுடைய பதவி காலத்தில் நான் உலகத்தில் இருக்கும் வறுமையை ஒழிக்கவே விரும்பினேன்” என்று அவர் கூறினார்.

ஜிம் தற்போது வளர்ந்து வரும் நாடுகளின் உள்கட்டுமான அமைப்பில் முதலீடு செய்து வரும் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்ற இருப்பதால் இந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

“உலக வங்கி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது மிகவும் முக்கியமான பிரச்சனைகளை சமாளித்து வருகின்றது. பசி, பஞ்சம், பட்டினி, காலநிலை மற்றம், அகதிகள் இடம் பெயர்தல், என்று இதன் பொறுப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

ஜிம்மின் பதவி விலகலுக்குப் பிறகு இடைக்கால தலைவராக க்றிஸ்டலினா ஜார்ஜிவா செயல்படுவார் என்று தெரியவருகிறது. கிம், தென் கொரிய தலைநகர் சியோலில் பிறந்தவர். மருத்துவப் பட்டம் பெற்று டாக்டராக பணியாற்றிய அவர் உலக சுகாதார அமைப்பில் ஆலோசகராக பணியாற்றினார்.

இவரின் பதவி விலகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ட்ரம்ப் நிர்வாகத்தினருக்கும், மற்ற நாடுகளின் அரசிற்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படலாம் என்று பலர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க : 7 வயது குழந்தையிடம் இப்படியா பேசுவது… ட்ரெம்பை கலாய்த்த நெட்டிசன்கள்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close