Advertisment

பைடன் போக விரும்பும் இந்திய உணவகம்: வீடியோ கால் ருசிகரம்

US President Joe Biden news in tamil: ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரத்தில் 'நான்ஸ்டாப்' எனும் இந்திய உணவகத்தை நடத்தி வரும் 'நீல்', 'சமீர்' எனும் சகோதர்களை வீடியோ கான்பெரன்ஸ் கால் மூலம் சந்தித்த வீடியோவை பைடனின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
World news in tamil US President Joe Biden wants to visit an Indian restaurant

World news in tamil: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன்  கடந்த மாதம் பெறுபேற்றுக் கொண்டார். அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று அச்சம் சில மாகாணங்களில் இன்னும் நீடித்து வருகிறது. இதனால் அந்த மாகாணங்களில் உள்ள சிறு வியாபாரிகளின் பொருளாதாரம் மிகவும் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றால் நலிவடைந்துள்ள சிறு வியாபாரிகளை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ கான்பெரன்ஸ் கால் மூலம் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார். 

Advertisment

இதையடுத்து ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரத்தில் 'நான்ஸ்டாப்' எனும் இந்திய உணவகத்தை நடத்தி வரும் 'நீல்', 'சமீர்' எனும் சகோதர்களை வீடியோ கான்பெரன்ஸ் கால் மூலம் சந்தித்த வீடியோவை பைடனின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் "அட்லாண்டா நகரத்திற்கு வந்தால் உங்கள் கடைக்கு வரலாமா?" என்று பைடன் கேட்கிறார். அதற்கு  'நான்ஸ்டாப்' உணவாக சகோதரர்கள், "கண்டிப்பாக வரலாம்" என்று புன்னகை நிரம்பிய முகத்துடன் கூறுகின்றனர். 

"ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் சமீர் மற்றும் நீல் 'நான்ஸ்டாப்' என்ற சிறிய உணவகம் வைத்திருக்கிறார்கள். மேலும் நாடு முழுவதும் உள்ள பல சிறு வணிகர்களைப் போலவே, அவர்களும், கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குறைகளைக்  கேட்கவும், அமெரிக்க மீட்புத் திட்டத்தின் மூலம் அவர்களைப் போன்ற வணிகர்களுக்கு எவ்வாறு உதவும் என்பதைப் பற்றி பேசவும் நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்"  என்று பைடனின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் பைடன் கூறியுள்ளார். 

'நீல்', 'சமீர் சகோதரர்கள் 'நான்ஸ்டாப்' உணவாகத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி  வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றால் 75% நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், 20 முதல் 25 பணியாளர்களை கொண்டு இயங்கி வந்த இவர்களது உணவகம் தற்போது  10 முதல் 15 பணியாளர்களை கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். 

இது போன்ற நலிவடைந்த வணிகர்களுக்காக 'அமெரிக்க மீட்புத் திட்டம்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும்,  அதற்காக சுமார் 10 பில்லியன் அமெரிக்கா டாலர்களை ஒதுக்கியுள்ளதாகவும், அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.  

அதிபர் பைடன் 'நீல்', 'சமீர் சகோதரர்களுடன் பேசிய வீடியோ: 

 

 

View this post on Instagram

 

A post shared by President Joe Biden (@potus)

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Joe Biden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment