Advertisment

பிட்காயின் நகரம் முதல் பிரஸ்ஸல்ஸ் கலவரம் வரை - உலகின் டாப் 5 நிகழ்வுகள்

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

author-image
WebDesk
New Update
பிட்காயின் நகரம் முதல் பிரஸ்ஸல்ஸ் கலவரம் வரை - உலகின் டாப் 5 நிகழ்வுகள்

உலகின் முதல் பிட்காயின் நகரம் - எல் சால்வடார்

Advertisment

உலகின் முதல் பிட்காயின் நகரத்தை கட்டமைக்க போவதாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் அறிவித்துள்ளது. லா யூனியனின் கிழக்குப் பகுதியில் இந்த நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிபர் நயிப் புகேலே கூறுகிறார். இங்கு முதலீடு செய்து, தேவையான பணத்தை சம்பாதித்து கொள்ளுங்கள் என கூறுகிறார். இந்த நகரத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு வாட் வரி மட்டுமே வசூலிக்கப்படும். வருமான வரியோ, சொத்து வரியோ கிடையாது.

publive-image

இது ஒரு முழுமையான சுற்றுச்சூழல் நகரமாகும். வசூலிக்கும் வாட் வரியில் பாதி பிட்காயின் பத்திரங்களுக்காகவும், மீதமுள்ள தொகை குப்பை சேகரிப்பது உள்ளிட்ட நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளது. அதன் தொகை தோராயமாக 30 ஆயிரம் பிட்காயின்ஸ் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பேரணியில் புகுந்த எஸ்யூவி.. 20க்கும் மேற்பட்டோர் காயம்

மில்வாக்கி புறநகர் பகுதியான வௌகேஷாவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பேரணிக்குள், திடீரென எஸ்யூவி கார் புகுந்ததில் ஒருசிலர் உயிரிழந்துவிட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

publive-image

Police investigate after a vehicle plowed through the Christmas Parade, leaving multiple people injured in Waukesha, Wisconsin, U.S. November 21, 2021. Mike De Sisti-USA TODAY NETWORK via REUTERS

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. காயமடைந்த11 பெரியவர்கள், 12 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலவரமாக மாறிய பிரஸ்ஸல்லிஸ் போராட்டம்

அரசின் கோவிட் 19 கட்டுப்பாடுகளை கண்டித்து பிரஸ்ஸல்லில் நடந்த போராட்டம் கலவரமானது. கற்கள் மற்றும் புகை குண்டுகளை வீசிய போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த, அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளும் காவல் துறையினர் வீசினர்.

சுமார் 35 ஆயிரம் பேருடன் அமைதியாக தொடங்கிய போராட்டம், கலவரமாக மாறியது. போலீசார் தாக்குதல் நடத்துகையில், போராட்டக்காரர்கள் கைகோர்த்துக்கொண்டு, சுதந்திரம் வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சியை ரத்து செய்ய ஜஸ்டின் பீபரிடம் கோரிக்கை

ஜமால் கஷோகியை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண், சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு பாப் பாடகர் ஜஸ்டின் பீபரிடம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

publive-image

சவூதி அரேபியாவில் இசை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும்படி பாப் நட்சத்திரம் அழுத்தத்தை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. 2018 அக்டோபரில் துருக்கியில் சவுதி ஏஜெண்டுகளால் கஷோகி கொல்லப்பட்ட பிறகு, இசை நிகழ்ச்சி நடத்திய மிகப்பெரிய பிரபலம் நடிகை மரியா கேரி மட்டுமே ஆவர். அவருக்கு வந்த எதிர்ப்புகளைப் புறக்கணித்து விழாவை நடத்தினார்.

நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்திய ஆஸ்திரியா

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரியா மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு 20 நாள்கள் வரை அமலில் இருக்கும் என்றும், ஆனால் 10 நாள்களில் நிலைமையைப் பொறுத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

மளிகைப் பொருட்களைப் வாங்க செல்வது, மருத்துவரிடம் செல்வது உடற்பயிற்சி செய்வது போன்ற அடிப்படைக் காரணங்களைத் தவிர்த்து மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். உணவகங்கள் மூடப்பட வேண்டும். பெரிய நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் டே கேர் சென்டர் திறந்திருந்தாலும், குழந்தைகளை வீட்டிலே வைத்துகொள்ள பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 13க்கு பிறகு லாக்டவுன் நீக்கப்படும் என்றாலும், தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment