Advertisment

நியூயார்க் நகர தெருவுக்கு ‘விநாயகர்’ பெயர்.. டுவிட்டரில் பங்குகளை வாங்கிய தொழிலதிபர்.. மேலும் செய்திகள்

இந்த தெருவுக்கு ‘விநாயகர் கோவில் தெரு’ என இணை பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

author-image
WebDesk
New Update
நியூயார்க் நகர தெருவுக்கு ‘விநாயகர்’ பெயர்.. டுவிட்டரில் பங்குகளை வாங்கிய தொழிலதிபர்.. மேலும் செய்திகள்

ரஷியா மிகப்பெரிய தாக்குதல் நடத்த தயாராகுகிறது - உக்ரைன்

Advertisment

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது ரஷியா மிகப்பெரிய தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 41-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 42.75 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 22 லட்சத்து 88 ஆயிரத்து ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 86 லட்சத்து 3 ஆயிரத்து 689 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 42 கோடியே 75 லட்சத்து 5 ஆயிரத்து 750 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 78 ஆயிரத்து 561 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா: நியூயார்க் நகர தெருவுக்கு ‘விநாயகர்’ பெயர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் உள்ளது. 1977-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விநாயகர் கோவில் வட அமெரிக்காவின் முதலாவது மற்றும் பழமையான இந்து கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது.

குயின்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட பிளஷிங்கில் அமைந்துள்ள இந்த கோவில் அமைந்திருக்கும் தெருவுக்கு போவின் தெரு என பெயரிடப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் மத சுதந்திரத்துக்காக போராடிய முன்னோடிகளில் ஒருவரான ஜான் போவின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

தற்போது இந்த தெருவின் அடையாளமாக இந்த விநாயகர் கோவில் விளங்கி வருகிறது. எனவே இந்த தெருவுக்கு ‘விநாயகர் கோவில் தெரு’ என இணை பெயர் சூட்டப்பட்டு உள்ளது. கடந்த 2-ந் தேதி நடந்த இந்த பெயர் சூட்டு நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால், நியூயார்க் மேயர் அலுவலக அதிகாரி எரிக் ஆடம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டுவிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்..!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறார்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராக இருக்கிறார்.

பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட 2,000 பேர்… அனைத்துக் கட்சி அமைச்சரவைக்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு

இதில் உலகம் முழுவதும் டெஸ்லா தயாரிப்பான மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உண்டு. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தில், 7.3 கோடி பங்குகள் இவர் வசமாகி உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment