Advertisment

உக்ரேனியர்களுக்கு விசா தேவையில்லை: அமீரகம்.. அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி.. மேலும் செய்திகள்

சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா எச்சரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
உக்ரேனியர்களுக்கு விசா தேவையில்லை: அமீரகம்.. அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி.. மேலும் செய்திகள்

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு, உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக வரலாம் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து ஐக்கிய அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகத்தின் தூதரக ஆலோசனை பிரிவின் உதவிச் செயலாளர் பைசல் லுட்பி கூறியதாவது:-

கடந்த புதன்கிழமை இரவு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகம் உக்ரைன் மக்கள் வருகை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி அங்கு வசிக்கும் உக்ரைன் நாட்டு மக்கள் அமீரகத்துக்கு வருகை புரிய விசா தேவையில்லை. நேரடியாக கடவுச்சீட்டுடன் வருகை புரிந்து விமான நிலையங்களில் வருகைக்கான விசாவை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக அமீரகத்தில் உள்ள உக்ரைன் நாட்டு தூதரகத்தின் ஒத்துழைப்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் மக்களுக்கு தேவையான உதவிகளை மற்றும் சேவைகளை வழங்கவும் அமீரகம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டுக்கு ஏற்கனவே அமீரகம் சார்பில் 50 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ.நாவின் மனிதாபிமான உடனடி நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உக்ரைனுக்கான பிரதேச அகதிகள் மறுவாழ்வு திட்டத்திற்காகவும் இந்த பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு ராக்கெட் என்ஜின்கள்

வழங்குவதை நிறுத்த ரஷ்யா முடிவு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அந்த நாட்டுக்கு ராக்கெட் என்ஜின்கள் வழங்குவதை நிறுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது.

இந்த போரை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதை ஏற்காத ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சர்வதேச பரிமாற்றங்களுக்கான ‘ஸ்விப்ட்’ கூட்டமைப்பில் இருந்து ரஷ்ய வங்கிகளையும் நீக்கி உள்ளன.

பொருளாதாரத் தடைகளையும், தண்டனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவுக்கு ராக்கெட் என்ஜின் ஏற்றுமதியை நிறுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்து உள்ளார்.

அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்:

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தகவல்

உக்ரைனின் சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தகவல் தெரிவித்துள்ளார்

உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் முயற்சி செய்து வருகின்றன. 

இந்த இடத்தில் தான் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின்நிலையமான சபோரிஷியா அணுமின் நிலையம் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் நாட்டின் 15 உலைகளில் 6 இருக்கின்றன.

1986-ம் ஆண்டு உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு நடந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில், சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா எச்சரித்துள்ளார்.

ஈரான் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஈரான், அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த ஒப்பந்தம், அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று கூறி அதில் இருந்து விலகுவதாக 2018-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது டிரம்ப் அறிவித்தார்.

அதில் இருந்து ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.

இந்த நிலையில் ஈரான் விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிறது..

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த நாட்டின் செம்மான் மாகாணத்தில் இமாம் கொமேனி விண்வெளித் தளத்தில் இருந்து ஒரு செயற்கைக்கோளுடன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இது மேக்ஸார் டெக்னாலஜிஸ் செயற்கைக் கோள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஏவுதளத்தில் ராக்கெட் ஸ்டாண்ட் எரிந்து சேதம் அடைந்திருப்பதையும், வாகனங்கள் அதைச்சுற்றி வந்ததையும் செயற்கைக் கோள் படம் காட்டுகிறது.

வெற்றிகரமான ஏவுதல்கள் பொதுவாக ராக்கெட் கேண்ட்ரிகளை சேதப்படுத்தாது என்று கருதப்படுகிறது.

அணுமின்நிலையத்தை பாதுகாக்க முயன்ற

உக்ரேனியர்கள் மீது ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு

உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் முயற்சி செய்து வருகின்றன.

இந்த இடத்தில் தான் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஷியா அணுமின்நிலையம் உள்ளது. இந்த அணுமின்நிலையத்தில் நாட்டின் 15 உலைகளில் ஆறு உலைகள் உள்ளன. 1986-ம் ஆண்டு உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு நடந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷியா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் சபோரிஷியா அணுமின் நிலையத்தை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய படைகள் ஈடுபட்டு வருகின்றன. அவர்களிடம் இருந்து பாதுகாக்கும் முயற்சியில் உக்ரேனிய மக்கள் கிழக்கு உக்ரைனில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்திற்கு செல்லும் பிரதான பாதையில் தற்காலிக தடைகளை ஏற்படுத்தினர்.

ரயில் நிலையத்தில் உக்ரைன் ராணுவப் பிடியில் 3000 இந்தியர்கள்: புதின் தகவல் 

ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பழைய கார்கள், குப்பை லாரிகள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு இந்த தற்காலிக தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

ரஷிய படைகள் முன்னேறுவதை தடுக்க தற்காலிக தடைகளுக்கு முன்னால் பொதுமக்கள் உக்ரேனிய கொடிகளை பிடித்துக்கொண்டு ஒரு மனித தடுப்பை உருவாக்கி ரஷ்யாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த நிலையில் நேற்று ரஷ்ய படைகள் முன்னேறி செல்லவதற்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அந்த பகுதி கரும்புகை மண்டலமாக காணப்பட்டது. 

சபோரிஷியாவில் உள்ள அணு உலை கட்டுப்பாட்டு மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் வெடித்தால், 2011-ல் ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் ஏற்பட்டதை விட மோசமான பேரழிவை உருவாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment