Advertisment

போரில் உக்ரைன் திரைப்பட இயக்குநர்.. உக்ரைன் மொழியில் புதிய வானொலி.. மேலும் செய்திகள்

நான் இங்கு ஒரு சாதாரண ராணுவ வீரர். போர் சமயத்தில் நீங்கள் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் சரி, பேருந்து ஓட்டுனராக இருந்தாலும் சரி, நாங்கள் எல்லோருமே இங்கு ராணுவ வீரர்கள்தான்.

author-image
WebDesk
New Update
போரில் உக்ரைன் திரைப்பட இயக்குநர்.. உக்ரைன் மொழியில் புதிய வானொலி.. மேலும் செய்திகள்

உக்ரைனில் போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. பல்வேறு நகரங்களில் ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது.

தாய்நாட்டுக்காக உக்ரைன் ராணுவத்தினரும், பொதுமக்களும் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர்.

Advertisment

உக்ரைன் முன்னாள் அழகி கூட ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகிறார். இந்நிலையில், அந்நாட்டின் திரைப்பட இயக்குநர் ஓலெக் சென்ட்சோவ், ராணுவ உடையில் துப்பாக்கி ஏந்தி சண்டையிட்டு வருகிறார்.

இவர், கிரீமியா பகுதியை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக 5 ஆண்டுகள் வரை ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது உக்ரைனுக்காக முன்கள ராணுவ வீரர்களில் ஒருவராக களத்தில் உள்ளார்.

publive-image

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திரைப்படங்களில் பார்ப்பது போன்று கிடையாது நிஜமான போர். பெரும்பாலான நேரங்களில் பதுங்கு குழிகளில் இருந்து தாக்குதலை நடத்த வேண்டியிருக்கும். ஏனென்றால் நீங்கள் முன்னேறி சென்றால் குண்டு வீச்சில் சிக்கி உயிரிழக்க நேரிடும்.

நான் இங்கு ஒரு சாதாரண ராணுவ வீரர். போர் சமயத்தில் நீங்கள் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் சரி, பேருந்து ஓட்டுனராக இருந்தாலும் சரி.. நாங்கள் எல்லோருமே இங்கு ராணுவ வீரர்கள்தான் என்கிறார் ஓலெக் சென்ட்சோவ்.

மே 9-ஆம் தேதிக்குள் போரை முடிவுக்கு

கொண்டு வர ரஷ்யா திட்டம்

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில் மே 9ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புவதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படைகளின் உளவுத்துறை தரப்பில், "மே 9 ஆம் தேதி ரஷ்யா ஜெர்மனியை போரில் வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது. அதனால் மே 9 ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா தங்கள் நாட்டு ராணுவத்திடம் தெரிவித்துள்ளது" என கூறப்பட்டுள்ளது.

உக்ரைனியர்களுக்காக புதிய வானொலி!

செக் குடியரசு நாட்டில் உக்ரைனிய மொழியில் புதிய வானொலி சேவை தொடங்கப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மக்கள் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்ந்து வருகின்றனர்.

இவ்வாறாக போலந்து, செக் குடியரசு போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்காக ரேடியோ உக்ரஜினா என்ற வானொலி தொடங்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கான டிப்ஸ், மியூசிக், கதைகள் ஆகியவை ஒலிபரப்பப்படுகின்றன. இந்த வானொலி அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

இதுவொரு ஒற்றுமை ரேடியோ என்று அதன் அதன் மேலாளர் நடாலியா சுரிகோவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் செக் குடியரசுக்கு உக்ரைனிலிருந்து அகதிகளாக வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீசாருக்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த குடும்பம்

சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்ய முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மோன்ட்ரீயுக்ஸ் பகுதியில் போலீசார் விசாரணைக்கு வந்ததை அறிந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அபார்ட்மெண்டில் 7-வது மாடியில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் வசித்து வந்தனர். 51-வயதை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி , மகன் , மகள் மற்றும் மனைவியின் சகோதிரியுடன் வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் குற்ற வழக்கில் ஈடுபட்டதாக அந்த குடும்பத்தின் தலைவரை போலீசார் கைது செய்ய வாரண்ட்டுடன் சென்றனர். ஜன்னல் வழியாக போலீசார் வருவதை அறிந்த அந்த குடும்பத்தினர் கதவை திறக்காமல் ஒட்டுமொத்தமாக 7-வது மாடியில் இருந்து குதித்தனர்.

போலீசார் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை செய்ய முயன்ற 5 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். சிகிச்சைக்காக ஒரு நபர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 மாதத்தைக் கடந்த உக்ரைன் போர்; மக்கள் என்ன சொல்கிறார்கள்? களத்தில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ்

இதுதொடர்பாக மோன்ட்ரீயுக்ஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment