பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆணிற்கு தகுந்த பதிலடி கொடுத்த பெண்!

இவர் ஒரு சோலோ ட்ராவலர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தனியாகவே சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார்.

இன்றைய உலகில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் அதிகரித்து வருகின்றன.  எந்த பக்கம் திரும்பினாலும்  பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை என பெண்கள் வாழவே பாதுகாப்பற்ற உலகமாக மாறி வருவது போல்  ஒரு பிம்பம் மேலோங்க ஆரம்பித்துள்ளது.

இப்படி, தனக்கு எதிரான குற்றங்களில் இருந்து ஒரு பெண் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.  ’சோலோ ட்ராவலர்ஸ்’ பயணத்தை அதிகளவில்  நேசிப்பவர்கள் தனக்கு பிடித்த இடங்களை எல்லாம்  தனியாக சென்று ரசிப்பார்கள்.

இதில் ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் அதிகளவில் ஈடுப்படுவார்கள்.  அப்படி ஒரு பெண் தான் லீயானா கார்.  அமெரிக்காவைச் சேர்ந்த இவர் ஒரு  சோலோ ட்ராவலர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தனியாகவே சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் 3 நாட்கள் பயணமாக ஐரோப்பிய நகரங்களுக்கு சென்றுள்ளார். அப்போது இவரை பின் தொடர்ந்த மர்ம நபர்,  இவரிடம்  தவறுதலாக நடந்துக் கொள்ள முயற்சித்துள்ளார். செய்வதறியாமல் திகைத்த  லியானா சத்தம் போட்டு உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால், எவருமே உதவிக்கு வராததால் அதிர்ச்சியில் அழுதுள்ளார்.

அதன் பின்பு, இப்போது நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த  லியானா பதிலுக்கு அந்த நபரை தாக்கியுள்ளார். தனது கையில் மொத்த பலத்தையும் சேர்த்து அந்த நபரின் கண்ணை பார்த்து குதித்தி இருக்கிறார். இதனால், அந்த நபரில் கண்  தக்காளி பழம் போல் பழுத்துள்ளது. வலியில் அந்த நபர்,  அங்கிருந்து ஓடியுள்ளார்.

பின்பு,  லியானா வீட்டிற்கு வந்து,  தனக்கு நேர்ந்த சம்பவத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல்,  அவனை அடித்ததால் தனது கைக்கு ஏற்பட்ட வலி மற்றும் காயத்தையும் ஃபோட்டோவாக  பதிவிட்டுள்ளாடர். லியானா கொடுத்த தகவலில் அடிப்படையில் அந் நாட்டு போலீசார்  அந்த நபரை கைது செய்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close