தாய்க்கு பிரசவம் பார்த்த 12 வயது சிறுமி; உலகம் முழுவதும் வைரலாகும் புகைப்படம்!

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஜெஸீ, தனது தாயின் பிரசவத்தை நேரடியாக பார்க்க விரும்பியிருக்கிறார். ஆனால், மருத்துவர்கள் ஜெஸீயை பிரசவமே பார்க்க வைத்துவிட்டனர்.

பிரசவம் நடந்து கொண்டிருந்த போது, அவளே தன் தம்பியை வெளியே எடுத்துள்ளார். அந்த அற்புதமான, பிரமிப்பான நிமிடங்களில், தன் உடன் பிறக்கும் சகோதரனை தன் அழகிய கைகளால் வெளியே தூக்கும் போது, தன்னை அறியாமல் அவள் அழுதுவிட்டாள். சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன இந்த புகைப்படங்கள் தாறுமாறாக ஹிட் அடித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஜெஸீ, “தன் வாழ்நாளின் மிகச்சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்று” என பிரமிப்பு விலகாமல் கூறினாள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close