scorecardresearch

37 வருடம் முன்பு நதியா கூட நடிச்ச குட்டிப் பசங்க எப்படி இருக்காங்க தெரியுமா? நதியா மட்டும் அதே அழகு!

இன்று வரை, தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களுக்கு, நதியா ஒரு சிறந்த நடிகை என்பதைத் தாண்டி, ஃபேஷன் ஐகானாக இருக்கிறார்.

Nadhiya
37 years of Nokkethadhoorathu Kannum Nattu movie Actress Nadhiya photos viral on Internet

ஈகோ பிடித்த டேவிடை தன் ஒரே ஒரு பொய்யால் மறைந்து மறைந்து ஓட வைத்த’ பூவே பூச்சுடவா படத்தில் நடித்த குறும்புத்தனமான, பப்ளி பெண்ணை யாரால் மறக்க முடியும்?

1984 இல், மலையாள இயக்குனர் பாசில்’ தனது ’நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு’ படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார். அப்போது நதியாவுக்கு 18 வயது. இது ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அதுவரை இப்படி ஒரு காஸ்மோபாலிட்டன் ஹீரோயினைக் காணாத மலையாள சினிமாவில், நதியா ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதைத் தான் பாசில் தமிழில் பூவே பூச்சுடவா என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்துக்காக நதியா’ சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார்.

1885 முதல் 88 வரை நதியா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்தார். நடிகையாக பீக்கில் இருந்தபோதே’ நதியா’ 1988 இல் ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். இந்த தம்பதியருக்கு சனம் மற்றும் ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நதியா 2004 இல், ஜெயம் ரவி நடித்த ‘எம். குமரன் S/O மகாலட்சுமி’ படத்தில், ரவிக்கு அம்மாவாக நடித்து, தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். இப்போது நதியா பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் பீஷ்மபர்வம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நதியா பேசியது தலைப்புச் செய்தியாக இருந்தது. அப்போது மம்முட்டி முன்னிலையில், நதியா, பெண் நடிகைகள், மம்முட்டி அல்லது மற்ற ஆண் சூப்பர் ஸ்டார்களைப் போல தங்கள் தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் பராமரித்தாலும், முன்னணி கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை என்று கூறினார்.

ஆனாலும் இன்று வரை, தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களுக்கு, நதியா ஒரு சிறந்த நடிகை என்பதைத் தாண்டி, ஃபேஷன் ஐகானாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் தனது உடை, நடை, தோற்றம் ஆகியவற்றால் பிரபலமான முதல் நடிகை நதியா மட்டும் தான்.

நதியாவுக்கு கமல் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நதியா கமலுடன் நடிக்க மறுத்துவிட்டார். இதற்குக் காரணம் முத்தம் பற்றிய பயம்தான். அப்போது அது ரசிகர்களின் பேச்சாக இருந்தது.

நதியா ஒரு எவர்கிரீன் நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், நதியா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு போட்டோ அதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

நதியா நடித்த’ ’நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு’ படத்தில், அவருடன் சில சிறுவர்களும் நடித்திருப்பார்கள்.

இந்த படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில், படத்தில் தன்னுடன் சிறுவர்களாக நடித்த சமீர் மற்றும் அசிஃப் ஆகியோருடன் சேர்ந்து எடுத்த போட்டோவை நதியா தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் நதியா எப்போதும் போல, இளமையாக இருக்க, அந்த இருவரும் நதியாவுக்கு அண்ணன்களை போல இருக்கின்றனர்.

இந்த போட்டோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: 37 years of nokkethadhoorathu kannum nattu movie actress nadhiya photos viral on internet