Advertisment

தன்னம்பிக்கையுடன் ’டிஸ்மார்ஃபிக்’ குறைபாட்டை எதிர்கொள்ளும் இலியானா: நாம் நிச்சயம் அறியவேண்டிய 5 விஷயங்கள்

இத்தகைய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை சுற்றியும் இருக்கிறார்களா? அப்பொழுது நீங்கள் நிச்சயம் இந்த 5 விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Body Dysmorphic Disorder,actress Ileana D’Cruz, bulimia, anorexia

சமீபத்தில் ஒரு ஜீன்ஸ் விளம்பரத்துக்காக 'குறும்படம்' ஒன்றில் பேசிய தென்னிந்தியாவின் பிரபல நடிகை இலியானா, தான் கடந்த 15 வருடங்களாக 'body dysmorphic disorder' எனும் நோயுடன் போராடி வருவதாக தெரிவித்தார்.

Advertisment

'Body dysmorphic disorder' என்பது தனது உடலமைப்பை பார்த்து தானே வெறுப்பது போன்ற குறைபாடாகும். அதாவது, ஒருவர் கண்ணாடி முன் நின்று, தன் தோற்றத்தைப் பார்த்து தானே வெறுப்பதாகும். இதனால், அவர்கள் தன் மீதான நம்பிக்கையை இழந்து, மற்றவர்களை விட்டு தனித்தே காணப்படுவார்கள்.

இதுகுறித்து, இலியானா அந்த வீடியோவில் பேசியதாவது, "பருவம் எய்திய பின் நான் மிகவும் வெட்கப்படுபவளாகவும், சுய உணர்வுடைய பெண்ணாகவும் இருந்தேன். எனது உடல் அமைப்பைக் குறித்து தொடர்ந்து கவலைப்பட்டேன். என்னுடைய 15 வயதின் போது நான் இந்தத் தொல்லையால் பாதிக்கப்பட ஆரம்பித்தேன். நான் 'body dysmorphic disorder' பிரச்சனையில் இருப்பதை உணரவே இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு, நான் உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருந்தேன்" என்றார்.

இலியானா அந்த வீடியோவில், நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் அதிகம் பேசினார். ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்று எழுச்சி ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது.

இப்படி உடல் சார்ந்த குறைபாடுகளான ’பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர்’, உண்ணும் பழக்கம் தொடர்பான குறைபாடுகளான புலிமியா, அனரெக்சியா உள்ளிட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை சுற்றியும் இருக்கிறார்களா? அப்பொழுது நீங்கள் நிச்சயம் இந்த 5 விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

1. இத்தகைய நோய்களுக்கான அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும், அவற்றை உடல் ரீதியான குறைபாடுகளாக விவரிக்க முடியாது. அவர்களது, உடலில் உள்ள சிறு குறைபாடுகளை மிகைப்படுத்துதலே இத்தகைய நோய்களாகும்.

2. ”உடல் எடையைக் குறைக்க வேண்டும்”, “நாம் அழகாக இருக்கிறோமா?”, “நிறைய சாப்பிட்டு விடக்கூடாது”, உள்ளிட்ட சிந்தனைகளையே ஒருவர் எப்போதும் கொண்டிருப்பது அவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால், அவர்களுடைய தன்னம்பிக்கை குறைந்து தங்கள் நண்பர்களுடன் பழகுவதையும், பொதுவெளிக்கு வருவதையும் தவிர்ப்பார்கள்.

3. இத்தகைய குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும், பிடிடி அமைப்பு, மைக்கேல் ஜாக்சன், ஆன்டி வார்ஹால், ஃபிரான்ஸ் காஃப்கா, சில்வியா பிளாத், சிர்லே மேன்சன் உள்ளிட்ட வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தவர்களும் தங்களது வெளிப்புறத் தோற்றத்தின் மீதான நம்பிக்கை சிதைந்ததால், இத்தகைய மனநல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறுகிறது.

4. இத்தகைய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்கள் தன்னை கவர்ச்சியானவராக நினைப்பதில்லை என தங்களுக்குள்ளாகவே நினைத்துக் கொள்வார்கள். இதனால், அவர்களத்ய் தினசரி வேலை பாதிக்கப்படும். குறிப்பாக, இத்தகைய குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தங்கள் படிப்புகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், அவர்களின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

5. ஒரு குறிப்பிட்டதை பற்றியே எப்போதும் சிந்தித்தல் மற்றும் செய்ததையே பலமுறை செய்தல் இவையே இக்குறைபாடுகளின் மையம். அடிக்கடி கண்ணாடியை பார்த்தல், தலை முடியை சீவுதல் உள்ளிட்டவற்றை அடிக்கடி செய்வார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment