Advertisment

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 190 வயதான ஜொனாதன் ஆமை!

முன்னதாக, துய் மலிலா என்ற ஆமை குறைந்தது 188 ஆண்டுகள் வாழ்ந்தது, கின்னஸ் சாதனையாக இருந்தது.

author-image
WebDesk
New Update
a 190 year old tortoise

The official record title states that he is the “oldest chelonian” – a category which encompasses all turtles (Source; Guinness World Records.com)

ஜொனாதன் என்ற 190 வயது ஆமை, உலகின் மிக வயதான நில விலங்கு என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இது ஒரு அரிய சாதனை என்று நம்பப்படுகிறது. பிரிட்டிஷ் கடல் கடநத பிரதேசத்தின், செயின்ட் ஹெலினா தீவில் உள்ள ஆமை தனது 190வது பிறந்தநாளை 2022ல் கொண்டாடுகிறது.

Advertisment

ரெக்கார்ட்ஸ் வலைத்தளத்தின்படி, ஜொனாதன் 1832 இல் பிறந்ததாக நம்பப்படுகிறது.

"ஜொனாதன் ஆமையின் வயது, அதன் முதிர்ச்சியின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. ஜொனாதன் 1882 இல் சீஷெல்ஸிலிருந்து, செயின்ட் ஹெலினாவுக்கு வந்தபோது அதற்கு குறைந்தது 50 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் ஜொனாதன் நாம் நினைப்பதை விட வயதானது, ”என்று ரெக்கார்ட்ஸ் தளம் கூறியது.

மேலும் அதிகாரப்பூர்வ பதிவு, ஜொனாதனை "பழைய செலோனியன்" என்று கூறுகிறது. இது அனைத்து ஆமைகளை உள்ளடக்கிய ஒரு வகை.

ஜொனாதனுக்கு இப்போது, ​​வயதாகிவிட்டதால், அதற்கு வாசனை உணர்வு இல்லை, பார்வையும் இல்லை. ஆனால் "அதன் செவித்திறன் சிறப்பாக இருக்கிறது.  அனாலும் ஜொனாதன் மனிதர்களின் சகவாசத்தை விரும்புகிறது. அவரது கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸின் குரலுக்கு அது நன்றாக பதிலளிக்கிறது".

ஜொனாதனின் கலோரிகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகளை அதிகரிக்க, கால்நடை பிரிவு வாரத்திற்கு ஒரு முறை அதற்கு கையால் உணவளிக்கிறது.

முன்னதாக துய் மலிலா என்ற ஆமை குறைந்தது 188 ஆண்டுகள் வாழ்ந்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. இது, 1777 இல் கேப்டன் குக்’ என்பவரால், டோங்காவின் அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டது மற்றும் 1965 இல் இறக்கும் வரை அவர்களின் பராமரிப்பில் இருந்தது என்று தளம் குறிப்பிடுகிறது.

முட்டைக்கோஸ், வெள்ளரி, கேரட், ஆப்பிள் மற்றும் பிற பருவகால பழங்கள் ஜொனாதனின் விருப்பமான உணவுகளாக உள்ளன. அதுக்கு வாழைப்பழமும் பிடிக்கும். ஆனால், அது வாயில் ஓட்டிக் கொள்ளும். கீரையும் மிகவும் பிடித்தமானவை", என்று ஜொனாதனின் பராமரிப்பாளர்கள் கூறினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment