Advertisment

பான் கார்டுகள் செயலிழக்கும் அபாயம் - விரைந்து இணைப்பீர் ; அல்லலை தவிர்ப்பீர்...

Aadhaar - Pan link deadline : ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், விரைவில் இரு எண்களையும் இணைத்து பல இன்னல்களிலிருந்து தப்பிக்க வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
an card, aadhaar card, Pan-Aadhaar Link Last Date

ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், விரைவில் இரு எண்களையும் இணைத்து பல இன்னல்களிலிருந்து தப்பிக்க வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகி விடுவதோடு மட்டுமல்லாது, வருமானவரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று மும்பையை சேர்ந்த வரி ஆலோசகர் பல்வந்த் ஜெயின் தெரிவித்துள்ளார்.

பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைப்பதற்கு இதற்குமுன் இருமுறை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வரும் 31ம் தேதி, இறுதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இன்னும் இணைக்கவில்லையா? 5 நிமிடங்களில் எளிதாக இணைக்கலாம்

பான் எண் செயலற்றதாகிவிடும் என்பதற்கு, இனி எவ்வித பணப்பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியாது என்பதாக நிதி ஆலோசகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காதவர்கள், இந்த காலக்கெடுவிற்குள் இணைத்து தேவையற்ற பாதிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆதார் எண்ணை பான் கார்டில் இணைப்பது மிகவும் எளிது ; இணைக்கும் வழிமுறை...

ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைக்கும் நிகழ்வு எளிமையான ஒன்றே ஆகும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன், எஸ்எம்எஸ் முறைகளில் இதை எளிதாக செய்ய வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்படி

ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்க இதற்குமுன் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நாம் இணைத்திருப்போம் அல்லது இணைக்க மறந்திருப்போம். நாம் இணைத்துவிட்டோமா இல்லையா என்பதை பரிசோதிக்க, ஆதார் எண், பான் எண் போன்றவற்றை நினைவில் இருந்தால் உடனேயேயும், அல்லது அந்த எண்களை தெரிந்துகொண்டு www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று சரிபார்க்கலாம்.

ஆன்லைன் வழிமுறை

வருமானவரி செலுத்தி வருபவர்கள், வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்கலாம் அல்லது இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.

வருமானவரித்துறையில் லாகின் செய்யாமலேயே இணைக்கும் வழிமுறை

வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (www.incometaxindiaefiling.gov.in ) செல்லவேண்டும். அதில் “Link Aadhaar” என்ற பிரிவிற்கு சென்றால், ஒரு படிவம் திரையில் தோன்றும். அதில் நாம் பான் எண், ஆதார் எண், பெயர், கப்சா கோடு உள்ளிட்டவைகளை நிரப்ப வேண்டும். பின் “Link Aadhaar” என்ற பட்டனை அழுத்தவும்.

வருமானவரித்துறை போர்டல், UIDAI தளத்தில் நமது ஆதார் விபரங்களுடன் அதை சரிபார்க்கும். சரியாக இருக்கும்பட்சத்தில், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை அங்கு பதிவிடுவதன் மூலம், எளிதாக சில நிமிடங்களில் ஆதார் - பான் எண்களை இணைத்துவிடமுடியும்.

ஆப்லைன் வழிமுறை

பான் கார்டு சேவை மையங்களான NSDL or UTIITSL மையங்களுக்கு சென்று, ஆதார் அட்டையின் பிரதி மற்றும் பான் அட்டையின் பிரதிகளை, அதற்கான படிவத்துடன் இணைத்து வழங்கும்பட்சத்தில் மேனுவலாக இரண்டு எண்களை இணைக்க முடியும்.

பான் அல்லது ஆதார் அட்டையில் மாற்றங்கள் ஏதும் இருப்பின் அதை சரி செய்துகொள்ள வேண்டும். ஆதார் அட்டையில் விபரங்களை திருத்த ரூ.25ம், பான் அட்டையில் விபரங்களை திருத்த ரூ.110 கட்டணமாக செலுத்த வேண்டும்.

எஸ்எம்எஸ் வழிமுறை

ஆதார் எண்ணை, எஸ்எம்எஸ் வாயிலாகவும் பான் எண்ணுடன் இணைக்கலாம். அதற்காக வருமானவரித்துறை சார்பில் பிரத்யேக எண் உருவாக்கப்பட்டுள்ளது. 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து கீழ்க்கண்ட வழிமுறை மூலம் இணைக்கலாம்.

UIDPAN12digit Aadhaar>10digitPAN>

உதாரணமாக உங்களது ஆதார் எண் 123412341234, பான் எண் ABCDE9999S என்பதாக கொண்டால், UIDPAN 123412341234 ABCDE999S என்று டைப் செய்து 567678 OR 56161 எண்ணுக்கு அனுப்பினால், உடனடியாக ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு நிகழ்ந்துவிடும்.

Pan Card Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment