Advertisment

ராஜ்டிவி-யில் தொடங்கிய பயணம்.. பிக் பாஸ் அபிராமி பற்றிய ரீகேப்!

நன்கு நடனம் ஆட தெரிந்த இவர் பரதநாட்டிய கலைஞரும் கூட.

author-image
WebDesk
New Update
abhirami venkatachalam age bigg boss

abhirami venkatachalam age bigg boss

abhirami venkatachalam age bigg boss : பிக் பாஸ் சீசன் 3. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய 3 ஆவது பிக் பாஸ் முதல் சீசனையே ஓவர்டெக் செய்து விட்டது எனலாம். காதல், சண்டை, தற்கொலை முயற்சி, அரசியல் என பலவிதமான சர்ச்சைகளை இந்த சீசன் பார்த்து விட்டது. இது எல்லாம் ரசிகர்களை ஒரு பக்கம் கடுப்பேற்றினாலும் சிலர் ஆர்வத்துடன் பார்க்கவும் தொடங்கினர்.

Advertisment

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு காதல் கதை ஓடிக்கொண்டு தான் இருந்தது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதன் முதலாக காதல் கதையை ஆரம்பித்தது அபிராமி தான். இதனால் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. முதலில் கவினை காதலிப்பதாக விளையாடி வந்த அபிராமி அதன் பின்னர், முகெனிடம் நெருக்கம் ஆனார்.

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் முகெனுக்கு தனது ஆதரவை அளித்து வந்தார் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி வெளியேறியபோது முகென் ஒரு சில நினைவு பரிசுகளை கொடுத்து அனுப்பி இருந்தார்.

இந்த பிரச்சனை இதோடு முடிந்து விட்டது. அபியும் முகெனும் இனி நல்ல நண்பர்கள் மட்டுமே என்பதை போல் தான் பேச்சுகள் தென்ப்பட்டன. மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அபிராமி முகெனிடம் பழகிய முறையும் அப்படித்தான் காட்டியது. முன்பு நடந்த தவறுக்காக முகெனிடம் அபிராமி மன்னிப்பும் கேட்டிருந்தார்.

அபிராமியின் முதல் சின்னத்திரை பயணம் ராஜ்டியில் தான் தொடங்கியது. அதன் பின்பு, இசை வெளியீட்டு விழா போன்ற பல திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளை அபிராமி தொகுத்து வழங்கி இருக்கிறார். நன்கு நடனம் ஆட தெரிந்த இவர் பரதநாட்டிய கலைஞரும் கூட.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரை அபி எந்தவித சர்ச்சையிலும் சிக்கியது இல்லை. ஆனால், பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற பின்பு தினம் தினம் புது புது சர்ச்சைகளில் அபிராமி சிக்கிக் கொள்வார். அது காதல் விஷயமாக இருந்தாலும் சரி, கேர்ள்ஸ் ஃபேரண்ட்ஸ்ஷிப் ஆக இருந்தாலும் சரி.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment