Advertisment

பாட்டி வந்தாச்சு, இனி ஜாலிதான்! ராதிகா வைரல் வீடியோ

தன் மகளின் வீட்டுக்கு சென்று பேரக்குழந்தைகளை ராதிகா பார்க்கும் ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Radhika

Radhika with Grandsons

நடிகை ராதிகா மகள் ரேயன். இவர் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ரேயன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், அதில் அடிக்கடி தன்னுடைய குழந்தை பருவ போட்டோஸ், குடும்பத்தினருடன் இருக்கும் நிறைய படங்களை பகிர்ந்து கொள்வார்.

Advertisment

இவரது கணவர் அபினவ் ஒரு கிரிக்கெட் வீரர். இந்த தம்பதிக்கு தாரக் என்கிற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர். ராதிகா அடிக்கடி தன் பேரக்குழந்தைகளை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி சமீபத்தில் தன் மகளின் வீட்டுக்கு சென்று பேரக்குழந்தைகளை ராதிகா பார்க்கும் ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

&feature=youtu.be

அதில் பாட்டியை பார்த்ததும் பேரக்குழந்தைகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து ராதிகாவும் துள்ளிக்குதித்து டான்ஸ் ஆடுகிறார். பிறகு குழந்தைகளுக்கு வாங்கி வந்த பரிசுகளையும், விளையாட்டு பொருட்களையும் கொடுக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment