தமிழில் ‘ஸ்ரீ’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷ்ருதிகா. அதற்கு பிறகு ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடித்தார்.
இவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். ஷ்ருதிகா அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறான். தற்போது ஷ்ருதிகாவுக்கு 34 வயதாகிறது. திருமணம், குழந்தை என செட்டில் ஆனவருக்கு ‘குக் வித் கோமாளி’ மூன்றாவது சீசன் நல்லதொரு கம்பேக்காக அமைந்தது.
ஷ்ருதிகா சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், போட்டோஷூட்களை பகிர்ந்து கொள்வார். இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஷ்ருதிகா டிசம்பர் இறுதியில் தன் கணவர், மகனுடன் லண்டனுக்கு டூர் சென்றார். அங்கு, ரெஜெண்ட் ஸ்ட்ரீட், கிளாக் டவர் , விண்டர் வொண்டர்லாண்ட் என பல இடங்களில் சுற்றி பார்த்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
அந்த அழகான புகைப்படங்கள் இங்கே..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“