Advertisment

நடிகை என்பதைத் தாண்டி ஸ்ரீப்ரியா சந்தித்த பிரச்சனைகள் - அதை அவர் எதிர்கொண்ட விதம் ஆச்சர்யப்படுத்தும்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress sripriya life history cinema serial politics - actress sripriya life history cinema serial politics

actress sripriya life history cinema serial politics - actress sripriya life history cinema serial politics

நடிகை ஸ்ரீப்ரியாவின் வாழ்க்கை என்பது நிகழ் காலத்து இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையில் பெண்கள் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்வது எப்படி? என்பதை கற்க ஒரு பாடமாகும்.

Advertisment

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

இன்று அவர் எட்டியிருக்கும் நிலை என்பது, சமூகம் அவருக்கு கொடுத்த பல்வேறு நெருக்கடிகளுக்கும், கேலி, கிண்டல்களை மீறிய ஒன்று.

சென்னையில் பிறந்த ஸ்ரீப்ரியா, சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளிக் கூடத்தில் தான் பயின்றார். இளம் வயதிலேயே முறையாக கிளாசிக்கல் நடனம் கற்றுத் தேர்ந்தார்.

1973 முதல் திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரீப்ரியா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில், 200க்கு மேற்பட்ட படங்கள் தமிழில் தான்.

குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் மட்டும் 28 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பதில் மட்டுமல்ல, இயக்கத்திலும் அவருக்கு பெரும் ஆர்வம் இருந்தது.

முதன் முதலாக 'மாலினி 22 பாளையம்கோட்டை' எனும் படத்தில் இயக்கினார்.

publive-image இப்படம் குறித்து அவர் நமது இந்தியன் எகஸ்பிரஸிடம் கூறுகையில், "எனது கோபங்களை பதிவு செய்வதற்காகவே இப்படத்தை இயக்கினேன்" என்றார்.

மொத்தம் 5 படங்களை இயக்கியுள்ளார். அதில், தெலுங்கில் 'த்ருஷ்யம்' ரீமேக் அவரது குறிப்பிடத்தகுந்த இயக்கமாகும்.

சினிமா மட்டுமல்லாது, சீரியல்களிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியவர் ஸ்ரீப்ரியா. அதில், அவர் இயக்கிய 'விடுதலை' எனும் சீரியல் குறிப்பிடத்தக்கது.

ஆனால், அவர் நடித்த 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் சினிமாவில் அவர் ரசிக்காத ரசிகர்களை கூட சம்பாதித்துக் கொடுத்தது.

எதையும் நேரடியாக,  முகத்துக்கு நேராக சொல்வது ஸ்ரீப்ரியாவின் ஸ்டைல்.

'நானும் உருவ கேலிக்கு ஆளாகியிருக்கேன்' என்று, உருவ கேலிக்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "பெண்களுக்கு எதிரான உருவ கேலி நீண்டகாலமாகவே இருக்கு. அதற்கு நானும் கண்டனம் தெரிவிச்சுகிட்டுதான் இருக்கேன். ஹீரோயினா நடித்த போது ஒல்லியாக இருந்த நான், இரண்டு முறை குழந்தை பெற்றபோது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டேன். பல மாதங்கள் நடக்க முடியாமல் ஓய்வில் இருந்தேன். பிறகு, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உடல் பருமன் பிரச்னை ஏற்பட்டுச்சு. ஆனாலும், யார் உதவியுமின்றி என் பணிகளைச் செய்துகிட்டுதான் இருக்கேன். உடல் பருமனுடன் இருக்கணும்னு எந்தப் பெண்ணும் ஆசைப்பட மாட்டார். உடல் பருமனுடன் இருப்பது என் தனிப்பட்ட விஷயம். அதைக் கேலி பண்ணிப் பேச யாருக்கும் உரிமையில்லை.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகிட்டே இருக்கு. தவிர, பெண்கள் மற்றும் பிறர் குறித்துத் தவறான கருத்துகளையும் போட்டோக்களையும் சித்திரிச்சு வெளியிடுறாங்க. இதனால பல பெண்கள் மனத்தளவில் பாதிக்கப்படுவதைத் தாண்டி, உயிரிழப்புகள்கூட ஏற்படுது. இதுபோன்ற நிகழ்வுகளால், ஆண்கள்கூட பாதிக்கப்படுறாங்க.

தளப் பக்கங்களில் போலியான கணக்கு வெச்சுகிட்டிருக்கிற நபர்கள்தாம் இதுபோன்ற செயல்களைச் செய்றாங்க. சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களின் வருகைக்குப் பிறகு, சினிமா பிரபலங்கள் குறித்து ஆபாசமான, தவறான கருத்துகளைப் பலரும் பதிவு செய்றாங்க. இதனால், நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்.

ஹீரோயினாக நடிச்சுகிட்டு இருக்கும்போதிலிருந்தே நான் தைரியமாகத்தான் செயல்படுறேன். அதனால, இத்தகைய நிகழ்வுகளுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்" என்கிறார் போல்டாக.

வாழ்க்கையில் இவ்வளவு சாதித்தும், சராசரி பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஒரு நடிகை என்பதைத் தாண்டி எதிர்கொண்டு, அதை வீழ்த்தி, இன்று அரசியலிலும் கால் எடுத்து வைத்து பெண்களுக்கு ஒரு ரோல் மாடலாகவே திகழும் ஸ்ரீப்ரியா உண்மையில் ஒரு ரியல் சிங்கப்பெண்!

Sripriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment