Advertisment

பி.பி, கொலஸ்ட்ரால் இருக்குதா… அகத்திக் கீரை கிடைச்சா விடாதீங்க!

Health benefits of agathi keerai in tamil: காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும் இயல்புடைய அகத்திக் கீரையை குடல்புண், தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி உள்ள மக்கள் பச்சையாக மென்று சாற்றை விழுங்கினால் வந்த நோய்கள் பறந்து போகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
agathi keerai benefits in tamil

Agathi keerai benefits in tamil: அகத்தை சுத்தப்படுத்தும் கீரைகளுக்கு முன்னோடியாக உள்ளதால் இவற்றை அகத்தி கீரை என்று அழைக்கிறார்கள். இவை வாய் புண் முதல் வயிற்றுப்புண் வரை குணப்படுத்தில் சிறந்ததாக உள்ளது. இந்த அற்புத கீரையை நெய் மற்றும் சின்ன வெங்காயத்துடன் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும்

Advertisment

அகத்தி கீரையில் உள்ள சத்துக்கள்:

அகத்தி கீரையில் ஏராளமான சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. இவற்றில் நீர்-73 சதவீதம், புரதம்-8.4சதவீதம், கொழுப்பு-1.4 சதவீதம், தாதுப்புக்கள்-2.1சதவீதம், நார்ச்சத்து-2.2சதவீதம், மாவுச்சத்து-11.8சதவீதம் உள்ளதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இவற்றில் உள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது.

அகத்தி கீரையில் சுண்ணாம்புச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

இந்த கீரையில் உயிர்ச்சத்துக்களும், வைட்டமின் ஏ - வும் (100கி, 9000 கலோரிகள்) நிரம்பி காணப்படுகிறது. இவை தவிர, தயாமின் சத்து - 0.21 மிகி, ரைபோப்ளேவின்- -0.09 மிகி, வைட்டமின் சி - 169 மிகி உள்ளது.

அகத்தி கீரையில் உள்ள சிறப்பு அம்சங்கள்

அகத்தி கீரையை மருந்து உண்ணும் காலத்தில் தவிர்த்தல் நல்லது.

இவை வாதத்தை சரிசெய்யும்.

மலமிலக்கியாக செயல்படுகிறது.

வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை அழிக்கிறது.

பித்தத்தை சமன் செய்கிறது.

publive-image

அகத்தியின் மருத்துவப் பயன்கள்:

அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும் இயல்புடைய இந்த அற்புத கீரையை குடல்புண், தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி உள்ள மக்கள் பச்சையாக மென்று சாற்றை விழுங்கினால் வந்த நோய்கள் பறந்து போகும்.

தோல் நோய்களை குணப்படுத்துகிறது.

அகத்திக்கீரை அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்களை குணப்படுத்துகிறது.

அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.

அகத்தி பொலிவற்ற தோலிற்கு கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

அகத்திக்கீரையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

publive-image

அகத்தி கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.

இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது.

ரத்த கொதிப்பை சரி செய்கிறது.

ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு உள்ளர்வர்களுக்கு அகத்தி கீரை மிகவும் நல்லது.

அகத்தி கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்.

அகத்தி கீரை ரத்த சோகையை நீக்குகிறது.

அகத்தி கீரையில் வைட்டமின் சி நிரம்பி காணப்படுகிறது இது இருதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது.

அகத்தி கீரையில்-16.22 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. இது ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. மேலும் கொழுப்புகளை கரைக்கிறது.

வைட்டமின் சி சத்து குறைவாக உள்ளவர்களை பக்கவாதம், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்றவைகள் தாக்கும்.

அகத்திக்கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றை யும் சமஅளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.

உயிர் கொல்லி கிருமிகளை தடுக்கிறது

அகத்தி நுண்கிருமிகள் வளர்வதையும், எச்.ஐ.வி. போன்ற உயிர் கொல்லி கிருமிகளையும் தடுக்கிறது. நோய் தொற்று உள்ளவர்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வந்தால், அந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு அதன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

விந்தணு குறைபாட்டுக்கு அகத்தி நல்லது

publive-image

களைப்பு, சதைவலி, மரமரப்பு, அசதி போன்ற குறைபாடுகள் பாஸ்பரஸ் குறைப்பாடுகளினால் ஒரு நாளைக்கு 1200 கி தேவைப்படும். ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு அகத்தி கீரை நல்ல தீர்வாக்கும்.

மற்ற ஆரோக்கிய பயன்கள்

அகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.

ரைபோப்ளேவின் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி வரும் 200-400மிகி ரைபோப்ளேவின் எடுத்துக் கொண்டால் இதற்கு நல்ல தீர்வு. அகத்தி இதற்கு உறுதுணையாக இருக்கும்.

வெண்மை நிறத்தில் காணப்படும் அகத்திக் கீரைகள் மரம் பொம்மை செய்யவும், வெடிமருந்து தயார் செய்யவும் பயன்படுகிறது.

வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.

அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப் பொருள்களாகவும், கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனமாகவும், மரக்குச்சிகள் கூரை வேய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

publive-image

அகத்தியின் பூவைச் சமைத்து உண்டு வர மலச்சிக்கல் குறையும்.

அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த ஒரு மாதத்தில் இருமல் குறையும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு - அதே அளவு தேன் கலந்து உண்டு வர வயிற்று வலி நீங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment