குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது விஷம் கொடுப்பதிற்குச் சமம் என்ற அதிர்ச்சித் தகவலை எய்ம்ஸ் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கு வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்றாலே தாய்மார்களுக்கு நினைவுக்கு வருவது கிரைப் வாட்டர் தான். குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருந்தால் கிரைப் வாட்டர் அதை நீக்கிவிடும் என்பது அவர்களின் எண்ணம். பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை வயிற்று பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்தியம் கிரைப் வாட்டர் தான். இப்படி தாய்மார்களின் உடனடி வைத்தியமாக இருந்த கிரைப் வாட்டர் பற்றி எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஜிம்மில் உடற்பயிற்சி செய்த டிவி நடிகர் மாரடைப்பால் மரணம்.. இளம் இந்தியர்கள் என்ன தவறு செய்கிறார்கள்?
சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் அருண் பாபு திருநாவுக்கரசு ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளது, குழந்தைகளின் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. டாக்டர் தனது ட்வீட்டில் “2022 ஆண்டிலும் இந்த கிரைப் வாட்டர் கொடுக்கும் பழக்கம் மாறவில்லை. இது உடலளவில் எந்த பலனையும் அளிக்காது. செயல்படாதது. அதேநேரம் பின்னர், உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியது. தொடர்ச்சியாக இதை கொடுப்பதால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக இதில் கலக்கப்படும் ப்ரோனோபோல் (Bronopol) என்பது அதிக நச்சுத்தன்மை நிறைந்த மூலக்கூறு. எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால் கிரைப் வாட்டர் கொடுப்பது குழந்தைக்கு விஷம் கொடுப்பதற்கு சமம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ப்ரோனோபோல் என்பது ஜி.ஐ நச்சு, எடை இழப்பு, புற்றுநோய், ஏன் மரணத்தை கூட உண்டாக்கும். இந்த கலவையைப் பயன்படுத்தும் ஒரே வாய் வழி மருந்து கிரைப் வாட்டர் தான். இந்த வாய் வழி மருந்து பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அதில் பயன்படுத்தப்படும் மற்ற மெத்தில் பராபென் & நா பென்சோயேட் ஆகியவையும் அபாயகரமான மூலக்கூறுகளாகும். "இந்தியாவில் உள்ள தலைமுறைகளின் தாய்மார்களால் நம்பப்படுகிறது" மற்றும் "என் பாட்டி என் அம்மாவுக்குக் கொடுத்தார், என் அம்மா எனக்குக் கொடுத்தார்" போன்ற கவர்ச்சிகரமான விளம்பரப் பிரச்சார சொற்றொடர்களால் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதற்கு கிரைப் வாட்டரும் குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. GRIPE WATER ஐத் தவிர்க்கவும்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil