தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ 18 வருடங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஜனவரி 17 அன்று அறிவித்தனர்.
இருவரும் தங்களை தனி நபர்களாக புரிந்து கொள்ள நேரம் எடுப்பதால் தனியுரிமை கோரினர். இருப்பினும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தெரிவித்தார். பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக மாறன் படம், நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியானது. நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி/சார், தி கிரே மேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களும் அவரிடம் உள்ளன.
அதே நேரம்’ ஐஸ்வர்யா சமீபத்தில் இந்தி-தமிழ் ரொமான்டிக் சிங்கிளான ’முசாஃபிர்’ என்ற மியூசிக் வீடியோவை இயக்கினார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா, அடுத்ததாக ’ஓ சாத்தி சால்’ படம் மூலம் இந்தியில் இயக்குனராக அறிமுகமாகிறார். 3, வை ராஜா வை படங்களைத் தொடர்ந்து’ ஐஸ்வர்யா இயக்கும் 3வது படம் இது.
இத்தனை ஆண்டுகளாக படம் இயக்காதது குறித்து, ஐஸ்வர்யா சமீபத்தில் கூறுகையில், “வை ராஜா வை படம் இயக்கிய பிறகு தமிழ், தெலுங்கு இந்தி படங்களை இயக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனது குழந்தைகளை கவனிக்க வேண்டி இருந்ததால் என்னால் படம் இயக்க முடியவில்லை. இப்போது அவர்கள் வளர்ந்து விட்டதால் மீண்டும் படம் எடுக்க வந்துள்ளேன். மேலும் எதிர்காலத்தில் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர் சிங் படங்களை இயக்க ஆர்வம் உள்ளது என்று கூறினார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அதில் தனது யோகா, பட வேலைகள், குடும்பம் என பல நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி ஐஸ்வர்யாவின் சமீபத்திய இன்ஸ்டா ஒன்று இப்போது வைரலாகியுள்ளது. அதில்’ நடு வார மனநிலை … கலைந்த கூந்தல் … நோ மேக்கப்… கவனமுள்ள உணர்ச்சிகள்.. வேலைத் திட்டம் மற்றும் ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்கிடுதல் என குறிப்பிட்டு’ கலைந்த முடியுடன் இருக்கும் செல்ஃபியை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா தனுஷ் எனும் பெயரை மாற்றாமலே இருந்தார். அதனால், இந்த ஜோடி மீண்டும் சேரும் என ரசிகர்கள் நம்பினர்.
ஆனால், தனுஷுடன் பிரிவு அறிவித்து, கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா தனுஷ் என்று இருந்த தன் பெயரை’ ஐஸ்வர்யா ரஜினி மாற்றியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“