Advertisment

இன்று அட்சய திருதி.. தங்கம் மட்டுமில்லை இந்த பொருளை வாங்கினால் கூட செல்வம் கொட்டும்!

ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது மிகவும் பலன் தரும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
akshaya tritiya 2019

akshaya tritiya 2019

akshaya tritiya 2019 : சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, "அட்சய திருதி" எனப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள். அட்சயதிருதி அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அன்று தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவது தான் மிகவும் சிறப்பு. அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.

Advertisment

அட்சய திருதியை அன்று தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், தங்கம் வாங்கினால் மட்டுமே தங்கும்; பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பதுதான் ஐதீகம்.சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று பொருள். எல்லா விதமான நலன்களையும் குறைவிலாது அள்ளி அள்ளிக் கொடுக்கும் இந்த நன்னாளை அட்சய திருதியை என்று அழைக்கின்றோம்.

அட்சய திருதியை அன்று தானம், தர்மம் செய்வதால் மிகவும் புண்ணியம் கிட்டும், மேலும் அன்று பொன், பொருள், நிலம் வாங்க மிகவும் உகந்த நாளாகும்.தானம் தர்மம் அட்சய திருதியை அன்று காலையில் துவரம் பருப்பு, மொச்சை, அரிசி ஆகிய தானியங்கள், சிவப்பு புடவை, வெள்ளை வேஷ்டி ஆகிய துணிகள் ஆகியவற்றை ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது மிகவும் பலன் தரும்.

இந்த ஆண்டுக்கான அட்சய திருதி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக்கடைகளில் இன்று அதிகாலை முதலே வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடைகளுக்கு வந்து ஆர்வமுடன் பொன்நகைகளை வாங்கி்க் கொண்டு, புன்னகையுடன் வீடு திரும்பி வருகின்றனர். இன்று தங்க நகைகள் வாங்க, கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் பேர் அதிகமாக முன்பதிவு செய்துள்ளதாக, தங்க -வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வது சிறந்தது. ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். வெயில் வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும்.ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும். தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும். தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. அன்று, பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள். நிரந்தரமாகத் தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment