1 மில்லியன் வியூஸ்.. சேட்டைகள் நிறைந்த ஆல் இன் ஆல் அய்லா வீடியோ!

Alya Manasa Sanjeiv Viral Youtube Video 1Million Views அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பதைப் பார்த்த ஆல்யா, அய்லாவை ஓட்டப்பந்தயத்தில் சேர்த்து விடவேண்டும் என ஓர் அம்மாவாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Alya Manasa Sanjeiv Viral Youtube Video 1Million Views
Alya Manasa Sanjeiv Viral Youtube Video 1Million Views

Alya Manasa Sanjeiv Viral Youtube Video 1Million Views : எப்போதுமே சுவாரசியமான கன்டென்ட்டுகளை கொடுத்து, பாசிட்டிவ் வைப் கொடுப்பதில் கில்லாடிகள் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி. அதிலும் தங்களின் மகளை வைத்து அவர்கள் உருவாக்கிய வீடியோக்கள் அனைத்தும் கியூட் ராகம். அவற்றில் பல காணொளிகள் ட்ரெண்டிங்கில் வருவதும் உண்டு. அந்த வரிசையில் தங்கள் மகள் அய்லாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காணொளி, மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அப்படி என்ன அந்த வீடியோவில் ஸ்பெஷல்?

பள்ளிக்குத் தயாராவதுபோல் ரெடியாகி, கியூட்டான குட்டி பையை பின்னால் மாட்டிக்கொண்டு மழலை மனம் மாறாமல் வாகனத்திற்காக காத்திருக்கிறார் அய்லா. வேகமாக கார் வந்து நிற்க, குடுகுடுவென ஓடி காருக்குள் அமர்ந்துகொண்டார். இல்லை இல்லை ஒரே வண்டியில் போகலாம் என்று அவரை அந்த காரிலிருந்து இறக்கிவிட, பக்கத்துக்கு அபார்ட்மென்ட்டில் இருந்து வெண்பா எனும் சிறுமி அய்லாவை பார்த்து கை அசைக்க, அங்கு சிறிய லவ்லி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இருசக்கர வாகனத்தில் வந்த சஞ்சீவின் நண்பரைப் பார்த்து அய்லா பயந்து ஓட, பிறகு அனைவரும் காரில் அமர்ந்து தங்களின் பயணத்தை தொடர்ந்தனர். ஒவ்வொரு நொடியும் அய்லாவின் புன்னகை பார்ப்பவர்களின் கவலைகளையெல்லாம் மறந்து தானாக சிரிப்பை வரவழைக்கும். பிறகு ஆப்பிள், மாதுளை என பாடம் எடுக்க, காகம் எப்படி கத்தும் என்றதற்கு அப்படியே காகம் போல கரைந்து காட்டியது வேற லெவல் கியூட்.

இதையடுத்து மாலுக்கு சென்றனர். அங்கு, வெப்ப நிலை சரிபார்ப்பு, சானிடைசர் உபயோகம் என அனைத்தையும் அய்லா தானாகவே செய்துகொண்டார். அடுத்த வருடம் அய்லாவை பள்ளியில் சேர்ப்பதற்காக சில பொருள்களை வாங்க கடைக்குச் சென்றனர். மாலில் விதவிதமான கடைகளைப் பார்த்த அய்லா, ஓரிடத்தில் இல்லை. அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பதைப் பார்த்த ஆல்யா, அய்லாவை ஓட்டப்பந்தயத்தில் சேர்த்து விடவேண்டும் என ஓர் அம்மாவாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

திடீரென அய்லா மாயமாக மறைந்துவிட, ஏதோ ஒரு மூலையிலிருந்து கியூட்டாக வெளியே வந்தார் அய்லா. பிறகு, குழந்தைகள் விளையாடும் பகுதிக்குச் சென்று அணைத்து விளையாட்டிலும் தன்னுடைய முழு பங்களிப்பைக் கொடுத்தார் இந்த குட்டி தேவதை. பிறகு, தாக்கு மிகவும் பிடித்த பொம்மையை எடுத்துக்கொண்டு அதனை பில் போடக்கூட விடாமல் எடுத்துக்கொண்டு கடைக்கு வெளியே சென்று நின்றது, பார்க்கவே அவ்வளவு அழகு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அய்லாவோடு புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள, குட்டி பட்டாசாகவே மாறினார் அய்லா. இப்படிப்பட்ட கியூட் அம்சங்கள் நிறைந்த இந்த காணொளி 1 மில்லியன் வியூஸ்களை பெற்றது ஆச்சரியமல்ல!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Alya manasa sanjeiv viral youtube video 1million views

Exit mobile version