Anbe Vaa Serial Actress Delna Davis about acting Tamil News
Anbe Vaa Serial Actress Delna Davis about acting Tamil News : குரங்கு பொம்மை உள்ளிட்ட சில தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சன் டிவியின் அன்பே வா சீரியலில் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதைக் கொள்ளைகொண்டவராக வலம்வந்துகொண்டிருக்கிறார் டெல்னா டேவிஸ். விதவிதமான போட்டோஷூட்களை எடுத்து இன்ஸ்டாவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர், தான் எப்படி திரையுலகிற்கு வந்தார் என்பதை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"நான் ஒரு பரதநாட்டிய கலைஞர். ஒருமுறை கேரளாவில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்ததைப் பார்த்த சில திரையுலகத்தைச் சார்ந்தவர்கள், என்னை போட்டோஷூட் செய்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்கள். அதன்பிறகு, அவர்களே ஃபேஷன் போட்டோஷூட் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு தமிழ்நாட்டிலிருந்து வந்த சிலர், என் புடை படங்களைப் பார்த்து, அவர்களின் திரைப்படத்திற்குக் கேட்டார்கள். எனக்கு பொதுவாகவே புடவை, பாவாடை தாவணி போன்ற காஸ்டியூம்கள் செட் ஆகும். அதனால், அந்தத் திரைப்பட வாய்ப்பும் எளிதில் கிடைத்தது.
அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்தேன். பிறகு, ஒருகட்டத்தில் இனி நடிக்கவேண்டாம் என்றும் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் முடிவு செய்து 3 ஆண்டுகள் சட்டம் படித்தேன். அதன்பிறகு, கொரோனா லாக்டவுன். அப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது வந்த மாடலிங் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். அப்போது, என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டன. மேக்-அப் செய்து கேமரா முன்பு நிற்கும்போது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன்.
இதற்குப் பிறகுதான் அன்பே வா தொடரில் கமிட் ஆனேன். சினிமாவைவிட சீரியலில் ஓவர் ஆக்டிங் முக்கியம். இங்கும் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என் நிஜ வாழ்க்கையில் நான் பூமிகா போல இருக்க மாட்டேன். பெரும்பாலும் என்னைப் பிடிக்காதவர்கள் அவ்வளவாக இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தால், அவர்களுக்கு என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்காது. நிஜ வாழ்க்கையில் என்னைப் பிடிக்காதவர்களிடம் நானே சென்று பேசுவேன். அவங்களே என்னுடன் பிறகு நண்பர்களாகிவிடுவார்கள். எனக்கு என்னுடைய பூமிகா கதாபாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது. அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil