Advertisment

இரண்டு, மூன்று காதல் இருந்தால் தவறேயில்லை - மனம்திறந்த டிடி

Anchor DD about Love Failure and Relationship உங்களை விட்டுச் செல்கிறவர் உங்களுக்கு வேண்டுமா? நிச்சயம் வேண்டாம்.

author-image
WebDesk
New Update
Anchor DD about Love Failure and Relationship Tamil News

Anchor DD about Love Failure and Relationship Tamil News

Anchor DD about Love Failure and Relationship Tamil News : தமிழ் சின்னதிரையில் நீண்ட காலமாகப் பலரின் ஃபேவரைட் தொகுப்பாளராக இருப்பவர் டிடி. பொதுமக்களுக்கு மட்டுமல்ல, இவர் ஓர் நிகழ்ச்சியை நகர்த்தி செல்லும் விதம் பல பிரபலங்களுக்கும் பிடிக்கும். ஆரம்பத்தில் சில தொடர்கள் மற்றும் விசில், நளதமயந்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவே நிலைத்து இருக்கிறார். அதுதான் இவருக்கான அடையாளமும். இவருடைய தடங்களைப் பின்பற்றும் இளைஞர்கள் ஏராளம்.

Advertisment
publive-image

சின்னதிரையில் மட்டுமல்ல, இவர் கல்லூரி பேராசிரியையும்தான். தற்போது லாக்டவுன் போடப்பட்டதால், சமீபத்தில் வீட்டிலிருந்தபடியே சமூக வலைத்தளம் மூலம் மக்களோடு உரையாடியுள்ளார். அப்போது பலர் பல்வேறு விதமான கேள்விகளை அடுக்கியுள்ளனர். அந்த வரிசையில் தனிமையைப் பற்றியும், காதல் தோல்வி பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இரண்டாவது காதல் மீது நம்பிக்கை உள்ளதா என்று கேள்வி கேட்டதற்கு, "காதல் நம் வாழ்வில் ஒரு அங்கம்தான். ஒரே நேரத்தில் 4,5 காதல் இருந்தால்தான் தவறு. மற்றபடி நம் வாழ்க்கையில் 2, 3 காதல் இருந்தால் தவறெதுவும் இல்லை" என்று பதிலளித்தார்.

publive-image

மேலும், பணம் மற்றும் ஸ்டேட்டஸிற்காக நம்மைவிட்டுச் சென்ற காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, "உங்களை விட்டுச் செல்கிறவர் உங்களுக்கு வேண்டுமா? நிச்சயம் வேண்டாம். உங்களைவிட்டுப் போனது நல்லதுதான்" என்கிறார்.

publive-image

2014-ம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால நண்பரும் துணை இயக்குநருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், 2017-ம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்தானது. இதனைத் தொடர்ந்து, டிடியின் கடந்த கால வாழ்க்கை, அவருடைய தற்போதைய சந்தோஷத்தை பாதிக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

publive-image

அதற்கு, "இல்லவே இல்லை. ஒருமுறை முடிந்துவிட்டது என்றால் அது முடிந்ததுதான். அதனை என்றைக்குமே திரும்பிப் பார்க்கக் கூடாது. கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அடுத்த நிலைக்குச் செல்லவேண்டும். அதையே நினைத்து அழுவதெல்லாம் டைம் வேஸ்ட்" என்று பதிலளித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment