தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான். புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.
குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கும், ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
சமீபத்தில் கூட பல்லவி தன் கணவருடன் சேர்ந்து தலை தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் இப்போது பல்லவி இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. அதற்கு காரணம் வெளிநாடுகளில் மட்டுமே ஹாலோவீன் எனும் பேய்த்திருவிழாவை இவர்கள் வீட்டில் கொண்டாடி உள்ளனர்.
உலகம் முழுவதும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்படுகிறது. இது பேய்களுக்கான பண்டிகை .
இதில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, எலும்புக்கூடு, சூனியக்காரி, ஓநாய் உள்ளிட்ட வேடமணிந்து சாலையெங்கும் சுற்றித் திரிந்து பீதியைக் கிளம்புவார்கள்.
இந்த விழாவைத் தான் மேகா தன் வீட்டில் கொண்டாடி உள்ளார். அந்த வீடியோவைத்தான் என்னுடைய தங்கையின் சிறிய ஹாலோவீன் பார்ட்டி என்று கூறி, பல்லவி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அதில் பயமுறுத்தும் இசையுடன் அறை முழுவதும் சிவப்பு விளக்கு, மண்டை ஓடு, துண்டாக கிடக்கும் ஒரு கை, இன்ஜெக்ஷனில் ரத்தம் போல இருக்கும் ஜூஸ் என ஜாலியாக ஹாலோவீன் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.
இதோ அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“