Advertisment

நவராத்திரி கொலு வைப்பது எப்படி? அனிதா குப்புசாமி

இந்தக் கொலுவில் உள்ள பிரசாதங்களை வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் அருகாமை வீடுகளில் உள்ள பெண் குழந்தைகள் உண்ட கொடுக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anitha kuppusamy shares tips to navarathiri kolu dolls

அனிதா குப்புசாமி

புரட்டாசி மாதம், அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்கும். இந்த நவராத்திரியை முன்னிட்டு நாடு முழுக்க வெவ்வேறு வகையிலான கொண்டாட்டங்கள் காணப்படும்.

அந்த வகையில் கொலு என்பது நவராத்திரியின் ஒரு அங்கமாகும். இந்தக் கொலு 3 படிகள் முதல் 11 படிகள் வரை காணப்படும். அவரவர் வசதிக்கேற்ப கொலு வைப்பார்கள்.

Advertisment

இந்தக் கொலு வைப்பதில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் காணப்படும். தாய் கொலு வைக்கவில்லை, மகள் வைக்கலாமா? கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார், இந்நேரத்தில் கொலு வைக்கலாமா? என பெண்களுக்கு இந்தச் சந்தேக பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்தச் சந்தேகங்களுக்கு அனிதா குப்புசாமி தனது வலையொளி (யூ ட்யூப்) பக்கத்தில் விளக்கத்தில் அளித்துள்ளார். அதில் ஒற்றை படையில் 3 முதல் 5, 7,9 என 11 வரிசையில் கொாலு வைக்கலாம்.

மேலும், கொலு வைப்பதற்கு வீட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். கிழக்கு மேற்காக, கொலு பொம்மைகள் கிழக்கு திசையை பார்த்தவாறு கொலுப்படிகட்டுகளை அடுக்க வேண்டும்.

இந்தப் வரிசையில் ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினம் மற்றும் கடவுள் என்று வரிசையாக கீழிருந்து மேலாக பொம்மைகளை அடுக்க வேண்டும்.

முதல் முறையாக கொலு வைப்பவர்கள் எடுத்த உடனேயே மிக பிரம்மாண்டமான அளவில் செய்வதை தவிர்த்து எளிமையாக தொடங்கலாம்.

கொலுவில் வைக்க மண் பொம்மைகளை வாங்கினால் வெகு சிறப்பு. கொலுவில் விநாயகர், மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர், முருகன் என கடவுளர் சிலைகளை வைக்கலாம்.

இந்தக் கொலுவில் உள்ள பிரசாதங்களை வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் அருகாமை வீடுகளில் உள்ள பெண் குழந்தைகள் உண்ட கொடுக்கலாம்.

இதில் நெய்வேத்தியம் செய்யப்படும் சுண்டலுக்கு வெங்காயம் மற்றும் பூண்டு பெரும்பாலும் சேர்க்கமாட்டார்கள்.

கொலு தொடர்பான முழுமையான காணொலியை பெற மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனிதா குப்புசாமியின் வலையொளி பக்கத்தை காணவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment