scorecardresearch

’மிஸ் இந்தியா’ பட்டம் அனுக்ரீத்தியை தேடி வந்தது எப்படி தெரியுமா?

எனக்கு அப்பா, அம்மா இரண்டுமே என் தாய் செலீனா

’மிஸ் இந்தியா’ பட்டம் அனுக்ரீத்தியை தேடி வந்தது எப்படி தெரியுமா?

கடந்த 2 வாரங்களாக செய்தித்தாள் தொடங்கி, தொலைக்காட்சி சேனல்கள், சோஷியல் மீடியாக்கள் என எந்த பக்கம் திரும்பினாலும் நம்ம ஊரு பொண்ணு அனுக்ரீத்தி வாஸ் பத்திய பேச்சு தான். யார் அந்த அனுக்ரீத்தி? என்று கேட்பவர்களுக்கு இதோ அவரைப் பற்றிய சின்ன இண்ட்ரோ.

ஒவ்வொரு பெண்ணும் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது ”நீ அழகி தான்டி” என்று அவர்களே தங்களின் அழகை செல்லமாக கொஞ்சி கொள்வார்கள். பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் அவர்களின் குடும்பத்தாருக்கும், கணவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் பேரழகி தான். இப்படி பல அழகிகள் இருந்தாலும் சில அழகிகள் மட்டும்தான் அழகி போட்டியில் கலந்துக்கொள்வார்கள்.

அப்படி 2018 ஆம் ஆண்டி மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்துக் கொண்டவர் தான் அனுக்ரீத்தி வாஸ்.சென்னை லயோலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிரெஞ்ச் இலக்கியம் படித்து வருகிறார்.29 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் என நாடெங்கிலுமிருந்து 30 தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிகள் கலந்துக் கொண்ட இந்த போட்டியில் அனுக்ரீத்தி தான் மிஸ் இந்தியானர்.இவர் ஏற்கனவே ‘மிஸ் இந்தியா தமிழ்நாடு 2018’ என்பது கூடுதல் தகவல்.

சிவப்பான பெண்கள் தான் அழகு என்ற கருத்தை மாற்றி எழுதி டஸ்கீ ஸ்கின் பெண்களும் அழகு தான் என்பதை அழுத்தமாக பதிவு வைத்துள்ளார். மிஸ் இந்தியா என்ற பட்டம் அனுக்ரீத்தியை தேடி வர, அவர் செய்த முயற்சிகள், சந்தித்த தோல்விகளும் ஒரு காரணம். தந்தை துணையின்றி தாயின் வளப்பில் வளர்ந்த இவர், படித்துக் கொண்டே மாடலிங் செய்து, அந்த மாடலிங்கில் வந்த பணத்தை வைத்து தனக்கு தேவையான அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த ’மிஸ் இந்தியா’ மட்டுமில்லை ’மிஸ் வேர்லட்’ ஆக வேண்டும் என்பது தான் அனுக்ரீத்தியின் கனவு, ஆசை, லட்சியம், எல்லாமே..

மிஸ் இந்தியா அனுக்ரீத்தி பற்றி தெரியாத 10 ரகசியங்கள்..

1.தீவிர அசைவ பிரியரான அனு உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று அசைவம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார்.

2. 19 வயதாகும் அனுக்கு காலேஜில் ஏகப்பட்ட நண்பர்கள். அவர் எந்த போட்டியில் கலந்துக் கொண்டாலும் நண்பர்களை உடன் அழைத்து செல்வார். ஆனால் எப்போதுமே அனுவின் ஃபேஸ்ட் ஃப்ரெண்ட் யாரென்று கேட்டால் அதற்கு அனுவின் பதில் ’அம்மா’ தான்.

3. காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அனு இரவில் மாடலிங் செல்வது, பகலில் காலேட்ஜ் செல்வது என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் 1 மணி நேரம் , நேரத்தை ஒதுக்கி தினமும் அவரின் அம்மாவை ஃபோனில் தொடர்புக் கொண்டு அன்றைய நாள் முழுவதும் நடந்த எல்லாவற்றையும் ஒப்பிப்பாராம்.

4. அனுவிற்கு 4 வயது இருக்கும் போது அவரின் அப்பா, அவரின் குடும்பத்தை விட்டு விலகி சென்றுள்ளார். அந்த நாளிலிருந்து அப்பாவை வெறுத்த அனு, தன்னிடம் அப்பா பற்றி பேசுபவரிடம் சற்று கோபத்துடன் “எனக்கு அப்பா, அம்மா இரண்டுமே என் தாய் செலீனா” தான் என்பாராம்.

5. மாடலிங் செய்தும் போதே அனுவிற்கு சினிமாவில் நடிக்கவும் ஆசை வந்திருக்கிறது.இதுப்பற்றி தனது தாய் செலீனாவிடம் அனு பகிர்ந்துள்ளார்.

6. அனுவிற்கு ஒரு தம்பி இருக்கிறார்.தனது தம்பியின் மீது அனுவிற்கு அளாதியான பிரியம். மாடலிங் செய்து வரும் பணத்தில் படிக்கும் போதே தனது தம்பிக்கும் அம்மாவுக்கும் பிடித்தமான பல பொருட்களை ஆசையுடன் அனு வாங்கி தந்துள்ளார்.

7. `மிஸ் இந்தியா தமிழ்நாடு 2018 போட்டியில் அனு கலந்துக் கொண்ட போது சின்ன கிராமத்தில் வசிப்பவர்களுக்கென ஏகப்பட்ட வரைமுறைகள் இருக்கின்றன. அத்தனையும் உடைக்கறதுக்காகவே இந்த அழகிப் போட்டியில் நான் கலந்துக்கிட்டேன்” என்று மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

8. அனுக்ரீத்தியின் சொந்த ஊர் திருச்சி. சிறு கிராமத்தில் தொடங்கி அவரது பயணம், இப்போது இந்தியா சார்பில் அடுத்த உலக அழகி போட்டிக்கு செல்லும் வரை உயர்ந்துள்ளது.

9. அனுவின் அம்மா செலீனா ஒரு பிபிஓ கம்பெனியில் பணிப்புரிந்து வருகிறார். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த அனு, தாயின் முழு ஆதரவால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதால பல இடங்களில் கூறி வருகிறார்.

10. அனுவிற்கு முதன்முதலாக ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றதை தொலைக் காட்சியில் பார்த்த போது தான், தானும் அழகிப்போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Anukriti vass choice in the world beauty contes