ஆப்பிளை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது நல்லது. இந்நிலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும். இதய நோய் ஏற்படுவதற்கு ரத்த குழாய்களில் படியும் கொழுப்பு காரணமாக உள்ளது. இந்த கொழுப்பை ஆப்பிள் சாப்பிடுவதால், அதன் நார்சத்து அதை கரைக்கும் பண்புகள் கொண்டது. இதனால் கொலஸ்ட்ரால் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஏற்படாது.
ஜீரணத்தை மெதுவாக செயல்படுத்தும். ஆப்பிளில் உள்ள நார்சத்து ரத்த சர்க்கரையை சீராக்கும். குளுக்கோஸ் உடைவதையும் மெதுவாக்கும். இந்நிலையில் மேலும் ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். மேலும் தினசரி வயிறு செயல்பாடுகளை சீராக்கும்.
நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உள்ளது. வீக்கத்திற்கு காரணமாக இருக்கும் நோய் எதிர்ப்பு செல்களை, வீக்கத்திற்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு செல்களாக இது மாற்றும்.
டைப் 2 சுகர் நோய் உள்ளவர்களுக்கு ஆப்பிள் சிறந்த தேர்வாக இருக்கும். சிறிய அளவு ஆப்பிளில் 95 கலோரிகள் மட்டுமே இருக்கும். இதனால் இதை சுகர் பேஷண்ட்ஸ் சாப்பிடலாம். உடல் எடை குறையவும் உதவும்.
நரம்பு சமந்தமான சிக்கலை இது குணமாக்கும். பிளநாய்ட்ஸ் க்யூயர்சிட்டன் நரம்பு சமந்தமான நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“