scorecardresearch

நாங்கள் எவ்வளவு வேதனை அடைந்தாலும் என்னை… அனிதா சந்தோகி எமோஷனல்

சின்னத்திரை மட்டுமல்ல, வெள்ளித் திரையிலும் அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து நடித்த டாக்டர் படம் வசூலை வாரிக் குவித்தது.

Anita chandhoke
Anita chandhoke

20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார்.

சின்னத்திரை மட்டுமல்ல, வெள்ளித் திரையிலும் அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து நடித்த டாக்டர் படம் வசூலை வாரிக் குவித்தது. அர்ச்சனா Wow Life எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் இவரது ஹோம் டூர், கிச்சன் டூர், ஃபிரிட்ஜ் டூர் வீடியோக்கள் மிகவும் பிரபலம்.

அர்ச்சனாவுக்கு அனிதா என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவருக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தை உள்ளது. அர்ச்சனா, அனிதா, சாரா மூவரும் குட்டிக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி தங்கள் இன்ஸ்டாகிராமிலும், யூடியூப் பக்கத்திலும் பகிர்வார்கள்.

இந்நிலையில் அனிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவுதான் இப்போது பார்ப்போரை உருக வைத்துள்ளது.

“இந்த படம் அப்பா இறந்து 3.5 மாதங்களுக்கு பிறகு எடுக்கப்பட்டது. நான் பயங்கர மன அழுத்தத்தில் இருந்தேன், வாழ்க்கையில் இருந்து எதையும் விரும்பவில்லை. இது எனது 17வது பிறந்தநாளாகும், அச்சு ஒரு கேக்கை ஆர்டர் செய்தார், என்னைச் சுற்றியிருந்த அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர், நாங்கள் எவ்வளவு வேதனை அடைந்தாலும் என்னை ஸ்பெஷலாக உணர வைத்தனர். அப்பா இல்லாத முதல் பிறந்தநாள், நினைத்துப்பார்க்க முடியாத வலி.

இன்றும் கூட நாங்கள் இன்னும் மீண்டு வருகிறோம் மற்றும் வாழ்க்கையில் உயர்வு மற்றும் தாழ்வு எது வரும்போதும் எதிர்கொள்கிறோம். இன்றும் கூட, நாம் ஒருவருக்கொருவர் ஆதரவில் வலுவாக நிற்கிறோம், மிக முக்கியமாக, நாம் செல்லும் எந்த வலியையும் கடந்து சிரித்துக்கொண்டே இருக்கிறோம்.

ஆம், நாம் இருக்கும் இடத்தில் இருப்பதற்கு பல வருடங்களாக வலி, வேதனை மற்றும் கடின உழைப்பு தேவைப்பட்டது! அவர்கள் சரியாக வாழும் வரை, மற்றவரின் வாழ்க்கைப் பயணம் யாருக்கும் தெரியாது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும், தந்தையை இழந்தவலி ஒருபோதும் நீங்காது. சில நாட்கள் மற்றவர்களை விட கடினமாக இருக்கும். அவர் மறைந்து விட்டார் ஆனால் என்றும் மறக்க முடியாது என்றும், உங்களுக்கு அருகில் ஒரு சிறந்த சகோதரி இருக்கும்போது நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Archana chandhoke anita chandhoke instagram zaara vineet

Best of Express