ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்திற்கு அரோமாதெரபி: அட இவ்வளவு சிம்பிள்தானா?

நறுமண சிகிச்சை, மனதை ஒரு நேர்மறையான திசையை நோக்கித் தூண்டுவதற்குப் பயன்படுகிறது என்கிறார் ஒரு நிபுணர்.

Aromatherapy
Aromatherapy for healthy and glowing skin

அரோமாதெரபி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, இது மூளையை அமைதிப்படுத்தவும், உடலை ஓய்வெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஸ்பாக்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களில், மக்கள் புத்துணர்ச்சியுடன் உணர அரோமாதெரபி பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில மணிநேரங்கள் திடமான உறக்கத்தைப் பெறுவதற்காக, படுக்கைக்குச் செல்வதற்கு முன் இதைப் பயன்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் அரோமாதெரபி சருமத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது? ராதிகா ஐயர், அனாஹதாவின் அழகு நிறுவனர், வாசனை’ நாம் அனுபவிக்கும் உணர்வுகளுடன் நேரடி தொடர்பு உள்ளது, மேலும் நறுமண சிகிச்சையானது மனதை ஒரு நேர்மறையான திசையை நோக்கித் தூண்டுவதற்குப் பயன்படுகிறது என்கிறார்.

“இது நம் உடலில் நன்மை பயக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது, ஏனெனில் அது நமது மூளை, ஒரு தளர்வான நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நமது உணர்ச்சிகளால் நமது தோல் மிகவும் பாதிக்கப்படுகிறது. அரோமாதெரபி தொடர்ந்து செய்யும் போது, ​​தோல் மற்றும் மனதில் வியக்க வைக்கும் நன்மைகளை ஏற்படுத்தும்.

தோல் பராமரிப்புக்கு உதவும் பின்வரும் அத்தியாவசிய எண்ணெய்களை அவர் பட்டியலிட்டுள்ளார்; படிக்கவும்.

லாவெண்டர் எண்ணெய்

இந்த எஸன்ஷியல் எண்ணெய் உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் மனதில் ஒரு நிதானமான நிலையைத் தூண்டுகிறது. லாவெண்டர் எஸன்ஷியல் எண்ணெய், சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் சோர்வை நீக்குகிறது.

சந்தன எண்ணெய்

சந்தனத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது, மேலும் சருமத்திற்கு அதிக ஈரப்பதம்/நீரேற்றம் தருகிறது.

ரோஸ்மேரி எண்ணெய்

இந்த எஸன்ஷியல் எண்ணெய் உங்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம், உங்கள் இரத்தம் அதிக ஆக்ஸிஜனை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது. ஆரோக்கியமான, ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் உடலுக்கும் சருமத்திற்கும் சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aromatherapy for healthy and glowing skin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com