இம்யூனிட்டி, எடை குறைப்பு… பூசணிக்காயில் இவ்ளோ பலன்களா?

ஊட்டச்சத்து நிபுணர் ரியான் பெர்னாண்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏன் பூசணிக்காய் தேவை என்பதை விளக்கியுள்ளார்.

பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் ஃபிரஷாக சாப்பிடும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ஆரோக்கியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஆனால், பழம் முதிர்ச்சியடையும்போது சாப்பிடும் காய்கறி தான் பூசணிக்காய். அதனை இந்தியில் safed kaddu என அழைக்கப்படுகிறது. பூசணிக்காய் மூலம் பல்வேறு விதமான உணவுகளை தயாரிக்கலாம். இது குறைந்த கலோரி, நார்ச்சத்துள்ள காய்கறியாகும். மேலும், அதிலிருக்கும் அதிக நீர் உள்ளடக்கம் செரிமானத்தைச் சீராக வைக்க உதவுகிறது. இது உடல் எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது.

ஊட்டச்சத்து நிபுணர் ரியான் பெர்னாண்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏன் பூசணிக்காய் தேவை என்பதை பதிவிட்டுள்ளார்.

அதில், பூசணி குறைந்த கலோரி பழமாகும், இது தண்ணீர், நார் மற்றும் பிற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது பொதுவாக பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

பூசணி நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், கண் பார்வை அதிகரிக்கவும் உதவுகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது

உடல் எடையை குறைப்பதிலும் பூசணிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.மலச்சிக்கலைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

இதய பிரச்சினையிலிருந்து பாதுகாக்கும் காய்கறி ஆகும்.

செஃப் சஞ்சீவ் கபூரின் வெள்ளை பூசணி கூட்டுக்கான எளிய செயல்முறை பிராசஸ் இதோ.

தேவையான பொருட்கள்

வெள்ளை பூசணி – 750 கிராம்
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
சுவைக்கு உப்பு

மசாலாவுக்கு தேவையானவை

தேங்காய் (துருவியது) – ½ கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
கருப்பு மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
அரிசி – 1½ தேக்கரண்டி

Tempering செயல்முறைக்கு

கடுகு விதைகள் – 1 தேக்கரண்டி
முழு உலர் சிவப்பு மிளகாய் – 2
உளுந்து பருப்பு தோல் (துளி உரட் பருப்பு) – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை-10-12
ஜிஞ்செலி எண்ணெய் – 2 தேக்கரண்டி
சாதம் – ¼ தேக்கரண்டி

செய்முறை

பூசணிக்காயின் தோலை நீக்கி, குட்டி க்யூப்ஸாக வெட்ட வேண்டும். மசாலா பொருட்கள் அனைத்தையும் நன்கு பேஸ்டாக அரைக்க வேண்டும். 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்துவிட்டு பூசணிக்காயை சமைக்க தொடங்க வேண்டும். சமைக்கும் பிராசஸ் பாதி நிறைவடைந்ததும், மசாலாவை சேர்த்துவிட்டு அது கெட்டியாகும் வரை வதக்கி கொண்டிருக்க வேண்டும். அவ்வப்போது கிளறிக்கொண்டிருக்க வேண்டும். இறுதியாக, மேலே உள்ள பொருட்களுடன் சேர்த்து சூடான எண்ணெய்யில் சமைக்க வேண்டும்.

செஃப் டிப்ஸ்

தேவைப்பட்டால் பூசணிக்காய்க்கு பதிலாக வேறு காய்கறிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். வித்தியாசமான சுவையைப் பெற தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ash gourd health benefits by nutrition coach ryan fernando

Next Story
மீந்துபோன தோசை மாவில் சூப்பரான மெதுவடை: சிம்பிள் செய்முறைVada recipes in tamil: Vada making with leftover dosa or idly batter in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com