Advertisment

வாஜ்பாய் எனும் சிறுவனை தேடும் கிராமம்!

நண்பர்கள் விளையாட்டாக  அவரை பின்புறத்தில் இருந்து நதியில் தள்ளிவிட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வாஜ்பாய் எனும் சிறுவனை தேடும் கிராமம்!

”எங்கள் ஊரில் பிறந்த எளிமையான பிரதமர் அவர்.. தன்னிகற்ற தலைவரும் அவரே “ நேற்று மாலை வாஜ்பாய்  காலமானர் என்ற செய்தி வெளியான  தருணத்தில்  பாதேஷ்வர் கிராம் முழுவதும் ஒலிக்கும் வாசகம் இவைதான்.

Advertisment

வாஜ்பாய் கிராமம் :

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் எளிமையாக வாழ்க்கையை தொடங்கியவர்களே பெரும்பாலும் உயர் பதவிகளை அலங்கரித்துள்ளனர் என்பதற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு உதாரணம் என்றால் மிகையல்ல.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாதேஷ்வர் கிராமத்தில் பிறந்த ஒரு சிறுவன், தேசத்தின் வலிமை மிக்க பிரதமராவார் உயர்ந்தார். வாஜ்பாயின் இளமைக்காலத்தை அவரது கிராமம் இன்று வரை மறக்கவில்லை.

ஆசிரியரான கிருஷ்ணா பிஹாரி - தேவி தம்பதியருக்கு 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய் சரஸ்வதி ஷிஷு மந்திர், கோர்கி, பரா, என குவாலியரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் தனது ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளிப் படிப்புகளை முடித்தார்.

சிறுவயதில் எல்லா  சிறுவர்களை போல்   வாஜ்பாயும் சூட்டியாக இருந்துள்ளார்.  அவரின் இளமைக்காலம் குறித்து அவரின் நண்பர்  ஒருவர் பகிர்ந்துக் கொண்ட சிறப்பு தொகுப்பு இதோ..

வாஜ்பாயுக்கு 10 வயது இருக்கும் போது நண்பர்களுடன் சேர்து யமுனா நதியோரம் குளிக்க சென்றுள்ளார்.  அப்போது  வாஜ்பாய்க்கு நீச்சல் தெரியாது.  இதை அறிந்துக் கொண்ட அவரின் நண்பர்கள் விளையாட்டாக  அவரை பின்புறத்தில் இருந்து நதியில் தள்ளிவிட்டுள்ளனர்.

வாஜ்பாயின் இறுதி பயணம்

பயந்து போன  வாஜ்பாய் நீச்சல் தெரியாமல்  தத்தளித்து, ஒரு வழியாக எப்படியோ கரை சேர்ந்தார். அந்த நிகழ்விற்கு வாஜ்பாய் யமுனா நதியோரம் செல்வதை தவிர்த்து வந்துள்ளார். அதற்கு பதிலாக  2 ஆண்டுகளாக தீவிர நீச்சல் பயிற்சியில்  ஈடுப்பட்டு வந்துள்ளார்.

எந்த நண்பன் அவரை நதியில் தள்ளிவிட்டு  விளையாடினோ, அந்த நண்பன் ஒரு நாள்  யமுனா ஆற்றில் வந்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தவித்துள்ளான். அப்போது அவனை காப்பாற்றியது நீச்சல் வித்தகரான வாஜ்பாய் தான்.

இந்த நிகழ்ச்சியை  அந்த கிராமமே இதுவரை மறக்கவில்லை. 10 வயதில் நீச்சல் தெரியாத அதே 10 வயது சிறுவன் தான் வளர்ந்த பின்பு 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று 23 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.

வாஜ்பாய் காலில் விழுந்த பெண் இவர் தான்

அதே சிறுவன் தான் ஆர்ய சமாஜத்தின் இளைஞர் பிரிவான ஆர்ய குமார் சபாவில் 1944ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். வாஜ்பாயின் இறப்பு இந்திய அரசியலில் மாபெரும் இழப்பு போல் போல் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில்  அவரின் பிரிவு  மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக மாறியுள்ளது.

 

Bjp Atal Bihari Vajpayee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment