Advertisment

செட்டிநாடு அவியல்... ருசியும் மணமும் வேற லெவல்!

இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது

author-image
WebDesk
New Update
aviyal recipe tamil chettinadu aviyal

aviyal recipe tamil chettinadu aviyal

Aviyal recipe tamil, chettinadu aviyal : செட்டிநாட்டு அவியலை சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல… டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது

Advertisment

உருளைக்கிழங்கு - 100 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பட்டை - சிறிதளவு

தேங்காய் துருவல் - கால் கப்

பச்சை மிளகாய் - 5

பூண்டு - 3 பல்

சோம்பு - 1 ஸ்பூன்

பொட்டுக்கடலை - ஒரு ஸ்பூன்

கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, பெருஞ்சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டையை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

காய்கள் வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

அவ்வளவுதான்… செட்டிநாட்டு சுவையான அவியல் தயார்…

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment