scorecardresearch

மாதவிடாய் காலத்தில் உடலுறவு? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின் படி, மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளைப் பின்பற்றுவது அவசியம்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
Can You Have Sex during period

சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடலுறவை விரும்புகின்றனர். ஆனால் பலர் தவிர்க்கின்றனர். இது குழப்பமானதாக இருந்தாலும், மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலுறவு கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், இது மகிழ்ச்சியை மட்டுமல்ல, மாதவிடாய் பிடிப்பைக் குறைக்கவும் உதவும். மாதவிடாய் காலத்தில் இருப்பதால் பாலியல் செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய அவசியமில்லை. சில பெண்களுக்கு, மாதவிடாயின் போது உடலுறவு கொள்வது, மாதத்தின் மற்ற நேரங்களை விட இனிமையானதாக இருக்கும். உடலுறவின் போது ஆர்கசம்’ தசைப்பிடிப்பு போன்ற மாதவிடாய் தொடர்பான அறிகுறிகளிலிருந்து விடுபட உதவுகிறது மற்றும் உயவூட்டலுக்கான தேவை குறைகிறது, என்று மருத்துவர் ஷில்பா கோஷ், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மற்ற விஷயங்களை போலவே, மாதவிடாய் காலத்தில் பாலியல் செயல்பாடு, நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது. “உங்கள் மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பான உடலுறவைக் கடைப்பிடிப்பது முக்கியம், ஏனெனில் நீங்கள் எச்.ஐ.வி போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றால், பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், இது தேவையற்ற கர்ப்பத்திற்கு வழிவகுக்கும். அதன் நன்மைகளைப் பற்றி கூறும்போது, மாதாந்திர வெளியேற்றம், போதுமான உயவூட்டலாக செயல்படுகிறது.

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் பிடிப்புகள், மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிப்பதால், இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது சாதகமாக இருக்கலாம், ஏனெனில் ஆர்கசம் போது’ ஆக்ஸிடாஸின் மற்றும் டோபமைன் போன்ற நல்ல உணர்வு ஹார்மோன்கள், எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இவை சில மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்க உதவலாம் என்று மருத்துவர் கூறினார்.

ஆனால் ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

கணினி போலவே நமது உடலிலும், பிரீ புரொகிராம்டு இண்டெலிஜன்ஸ் உள்ளது. அதற்கு எதிராக நடக்கும் எதுவும் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, அதைப் பாதுகாத்து வளர்ப்போம், என்று ஆயுர்வேத நிபுணர் ரேகா ராதாமோனி இன்ஸ்டாகிராமில் கூறினார்.

கேரள ஆயுர்வேத மருத்துவர் அர்ச்சனா சுகுமாரன் இதை ஒப்புக்கொண்டார்:  ஆயுர்வேதம், மாதவிடாய் காலத்தை இயற்கையான, உட்புற சுத்திகரிப்பு என்று கருதுகிறது, இது ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றம் மற்றும் தோஷ சமநிலையை பாதிக்கலாம்.

எனவே, ஆயுர்வேதத்தின் படி, மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைப் பின்பற்றுவது அவசியம். இது வளர்சிதை மாற்றத்தின் குறைவு ஆகியவற்றைத் தவிர்க்கவும், வலிமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.

மருத்துவர் ராதாமோனி கூறுகையில், மாதவிடாய் காலங்களில், வாதத்தின் இயக்கம் கீழ்நோக்கிய திசையில் இருக்கும், அதேநேரம் உடலுறவின் போது, ​​வாத இயக்கம் மேல்நோக்கி இருக்கும்.

எனவே, நீங்கள் உடலுறவில் நெருக்கமாக இருக்கும்போது, ​​​​வாதம்’ எதிர் மற்றும் முரண்பட்ட திசைகளில் செல்கிறது, இது பெண் இனப்பெருக்க அமைப்பில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். மேலும் மாதவிடாய் என்பது பெண்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம், அதிக சுறுசுறுப்பாக இருக்கக்கூடாது, ஏனெனில் உடல் ஏற்கனவே சமநிலையின்மையில் உள்ளது. எனவே, மாதவிடாய் காலத்தில் நிம்மதியாக ஓய்வெடுப்பது நல்லது என்று மருத்துவர் ராதாமோனி கூறினார்.

இதை மருத்துவர் டிக்சா பவ்சர் ஒப்புக்கொண்டார். செக்ஸ் வாயுவை அதிகரிக்கிறது, இது வலிமிகுந்த காலங்கள், வீக்கம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ரஜஸ்வல பரிச்சார்யாவின் கூற்றுப்படி, மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் உடலுறவை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில், உடல் பலவீனமாக உள்ளது, அப்போது பெண்ணுக்கு ஓய்வு தேவை.

உடலுறவில் ஈடுபடுவது வலி ​​மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதும், நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, என்று மருத்துவர் சுகுமாரன் மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Ayurveda sexual health tips can you have sex during period