Advertisment

நிலையான எடை இழப்புக்கு இந்த 8 வாழ்க்கைமுறை மாற்றங்களை பின்பற்றுங்கள்!

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதில் உறுதியுடனும் நிலைத்தன்மையுடனும் இருந்தால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நீங்கள் இழந்த எடையை மீண்டும் அடைய மாட்டீர்கள் என்று மருத்துவர் திக்ஸா பவ்சர் கூறினார்.

author-image
WebDesk
New Update
நிலையான எடை இழப்புக்கு இந்த 8 வாழ்க்கைமுறை மாற்றங்களை பின்பற்றுங்கள்!

அதிக உடல் எடையைக் குறைக்க பலர் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இருப்பினும், உடல் எடையை குறைப்பது சில சமயங்களில் அச்சுறுத்தலாக இருக்கலாம். அதற்கு மகத்தான அர்ப்பணிப்பும், நிலையான உடற்பயிற்சியும் தேவைப்படுகிறது.

Advertisment

ஆனால் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுமுறை மட்டும்  எடை இழப்புக்கு உதவாது. சில எளிய வாழ்க்கை முறை காரணிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் திறம்பட உடல் எடையை குறைக்க விரும்புபவராக இருந்தால், எடை இழப்புக்கு உதவும் சில வாழ்க்கை முறை மாற்றங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் திக்‌ஸா பவ்சர் சமீபத்தில் இதுபோன்ற சில மாற்று வழிகளை பரிந்துரைத்துள்ளார்.

பதிவை பாருங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதில் உறுதியுடனும் நிலைத்தன்மையுடனும் இருந்தால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நீங்கள் இழந்த எடையை மீண்டும் அடைய மாட்டீர்கள் என்று அவர் கூறினார்.

நிபுணர் பரிந்துரைத்தபடி, நிலையான எடை இழப்புக்கு இந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்களை உங்கள் வழக்கத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.

வெல்லமா? வெள்ளை சர்க்கரையா?

நீங்கள் உபயோகிக்கும் வெள்ளை சர்க்கரையில் கலோரிகள் இல்லை. ஆனால் வெல்லம் ஊட்டச்சத்து நிறைந்தது.

வெதுவெதுப்பான நீரா? குளிர்ந்த நீரா?

வெதுவெதுப்பான நீர் கலோரிகளை எரிக்க உதவும் உங்கள் செரிமான உறுப்பை உகந்த நிலையுடன் வைத்திருக்கிறது. மேலும் இது ஜீரணத்தை எளிதாக்கி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

தினசரி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அடிகளை நடப்பது

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது (5,000-10,000 அடிகள் நடப்பது) உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும், நெகிழ்வாகவும், இரத்த ஓட்டத்துக்கும் உதவுகிறது.

பழங்களை சாப்பிடுவதா? பழச்சாறு குடிப்பதா?

பழச்சாறுகளை உட்கொள்ளும் போது, அதிலுள்ள நார்ச்சத்து இழக்கப்படுகிறது. மற்றும் அது திரவமாக இருப்பதால், நீங்கள் அதிகமாக குடிக்க விரும்புகிறீர்கள். ஆனால் பழங்களை மென்று சாப்பிடும் போது, ​​​​அவற்றின் செரிமானம் உங்கள் வாயிலிருந்து தொடங்குகிறது. நார்ச்சத்தும் அப்படியே இருப்பதால் நீங்கள் அவற்றை சரியான விகிதத்தில் சாப்பிடுகிறீர்கள்.

மதியம் உணவை தவிர்ப்பதா? சாப்பிடுவதா?

10 முதல் 2 மணி வரை( வளர்சிதை மாற்றத்துக்கு உகந்த நேரம்) மிதமான மற்றும் கனமான உணவை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் என்பதால் மதிய உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.

இரவில் தாமதமாக அதிகம் சாப்பிடுவது? அளவுடன் சாப்பிடுவது?

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, வளர்சிதை மாற்றம் குறைகிறது, எனவே இரவு உணவை மிதமாகவும், சீக்கிரமாகவும் சாப்பிட வேண்டும். (8 மணிக்கு முன்பே இரவு உணவை எடுத்துக் கொளவது நல்லது.)

தூக்கத்தை தவிர்ப்பது? நன்றாக தூங்குவது?

நீங்கள் தூங்கும்போது உங்கள் கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்குகிறது, எனவே தூக்கத்தை புறக்கணிப்பது உங்கள் எடை இழப்பை தாமதப்படுத்த வழிவகுக்கும். எடை இழப்பில் விரைவான முடிவை நீங்கள் காண விரும்பினால் இரவு 10 மணிக்குமுன் உறங்க செல்லுங்கள்.

உட்கார்ந்தே இருப்பது? உடற்பயிற்சி செய்வது?

சரியான தூக்கம், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் ஆரோக்கியமான உணவு தேர்வுகள் ஆகியவற்றுடன் உடற்பயிற்சியும் நிலையான எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே, யோகா, நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஜிம், நீச்சல் போன்றவற்றில் ஏதாவதொன்றை செய்வதன் மூலம், நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment