Advertisment

Beauty Tips: அடர்த்தியான புருவங்கள், கண் இமைகள் வேண்டுமா? இதை மட்டும் டிரை பண்ணுங்க!

இருப்பினும், நீங்கள் அடர்த்தியான புருவங்கள், கண் இமைகளை அடைய விரும்பினால், நீங்கள் பார்லருக்குச் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் அவற்றை ஒரே ஒரு எளிய தயாரிப்பு மூலம் பெறலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
beauty tips

Ayurvedic expert shares benefits of Castor oil for thick eyebrows eye lashes

ஒரு பெண்ணுக்கு அழகு சேர்ப்பதில் கண்கள் இன்றியமையாதது. அதே அளவுக்கு புருவங்களும், கண் இமைகளும் கூட. கண், புருவம், கண்ணிமைகளுக்காகவே ஆயிரகணக்கான மேக்கப் பிரொடக்ட்ஸ் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சில பெண்கள் மெலிதான புருவங்கள் இருப்பதால் வருத்தப்படுகின்றனர். மேலும் தங்கள் புருவங்களை அடர்த்தியாக மாற்ற பல அழகு தயாரிப்புகளையும் பயன்படுத்துகின்றனர்.

Advertisment

ஆயுர்வேத நிபுணரான டாக்டர் நித்திகா கோஹ்லியின் கூற்றுப்படி, பலருக்கு வயதாகும்போது புருவம் மெல்லியதாக மாறும். "இளைஞர்களுக்கு கூட ஹார்மோன்கள் அல்லது மோசமான கவனிப்பு காரணமாக புருவம் மெல்லியதாக மாறலாம்"

முன்னதாக முதுமை, ஊட்டச்சத்து குறைபாடுகள், அரிக்கும் தோலழற்சி, காண்டாக்ட் டெர்மடிடிஸ், அலோபீசியா அரேட்டா மற்றும் தைராய்டு குறைபாடு ஆகியவை புருவம் மெலிவதற்கான சில காரணங்கள் என்று தோல் மருத்துவர் ஆஞ்சல் பாந்த் முன்னதாக பகிர்ந்து கொண்டார்.

இருப்பினும், நீங்கள் அடர்த்தியான புருவங்கள், கண் இமைகளை அடைய விரும்பினால், நீங்கள் பார்லருக்குச் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் அவற்றை ஒரே ஒரு எளிய தயாரிப்பு மூலம் பெறலாம் - விளக்கெண்ணெய்!

publive-image

அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்பது இங்கே.

*ஒரு ஸ்பூலி பிரஷை விளக்கெண்ணெயில் நனைக்கவும்.

* நீங்கள் மஸ்காராவைப் பயன்படுத்துவதைப் போலவே உங்கள் கண் இமைகளிலும் இதைப் பயன்படுத்துங்கள். கண்களில் எண்ணெய் படாமல் கவனமாக இருங்கள்.

* மேல் மற்றும் கீழ் இமைகளில் தடவவும்.

*இரவு முழுவதும் அப்படியே விடவும்.

*அடுத்த நாள் கழுவவும்.

பயனுள்ள முடிவுகளுக்கு, காலையில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை தோலுடன் ஆமணக்கு எண்ணெயை அகற்றவும் என்று நிபுணர் பரிந்துரைத்தார்.

அடர்த்தியான புருவம், கண் இமைகளை பெற, இந்த சிம்பிள் விளக்கெண்ணெய் குறிப்பை மறக்காம டிரை பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment