Advertisment

ஆயுர்வேத அலர்ட்.. நல்ல கண் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்!

நெல்லிக்காய் முதல் கல் உப்பு வரை -- இங்கே உள்ள அனைத்து உணவுகளையும் பாருங்கள்!

author-image
WebDesk
New Update
eye foods for eye sight

Ayurvedic expert shares eye foods for good eye sight

தொற்றுநோய்க்கு மத்தியில்’ திரை நேரம் அதிகரித்து வருவதால், ஒருவரின் கண்களை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகிவிட்டது

Advertisment

நீல ஒளியின் வெளிப்பாட்டைக் குறைப்பது, கண்களுக்குப் பயிற்சி அளிப்பது மற்றும் வழக்கமான சோதனைகளுக்குச் செல்வது முக்கியம் என்றாலும், உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில உணவுகள் உள்ளன.

ஆயுர்வேத பயிற்சியாளரான மருத்துவர் ஐஸ்வர்யா சந்தோஷ், சிறந்த கண் ஆரோக்கியம் மற்றும் கண்பார்வைக்கு நெய், நெல்லிக்காய், திராட்சை, கல் உப்பு மற்றும் திரிபலா போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், இந்த உணவுகள் ஒவ்வொன்றும் ஏன் அவசியம் என்பதை அவர் விளக்கினார்.

* திரிபலா பொடியை நெய் மற்றும் தேன் கலந்து’ இரவில் சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

*நெல்லியில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது ஆரஞ்சு விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம். வைட்டமின் சி’ விழித்திரை செல்களை பராமரிப்பதிலும், ஆரோக்கியமான நுண்குழாய்களை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

*நெல்லி இயற்கையில் கண்களுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு ரெட்டினோபதி நிகழ்வுகளில்’ இது மிகவும் நல்லது.

*கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது கல் உப்பு மட்டுமே. எனவே சமையலுக்கு கல் உப்பை பயன்படுத்தி பாருங்கள்.

*காய்ந்த திராட்சையில் உள்ள பாலிஃபீனாலிக் பைட்டோநியூட்ரியண்ட்கள் பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கண் தசைகளின் சிதைவை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. இது பார்வை மற்றும் கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

காய்ந்த திராட்சையில் இயற்கையிலே பித்தத்தை சமப்படுத்தும் பண்புகள் உள்ளன. கண் பித்த ஸ்தானம் என்பதால், காய்ந்த திராட்சையை சாப்பிடுவது கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது, ”என்று அவர் கூறினார்.

நல்ல தேன், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

*உங்கள் ஜீரண சக்திக்கு ஏற்ப’ சாதாரண நெய்யை சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. நெய், குறிப்பாக ஆயுர்வேதத்தில் கண் ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment