ஈரலை பாதுகாக்கும் வல்லமை... அவசியம் தெரிஞ்சுகோங்க!

ஆயுர்வேதம் படி உடல், மனம் இரண்டும் தொடர்பு உண்டு. அதன்படி நீண்ட ஆயுளுக்கு சில தினசரி பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். இது நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும். அப்படி நீங்கள் செய்ய வேண்டிய குறிப்புகளை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஆயுர்வேதம் படி உடல், மனம் இரண்டும் தொடர்பு உண்டு. அதன்படி நீண்ட ஆயுளுக்கு சில தினசரி பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். இது நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும். அப்படி நீங்கள் செய்ய வேண்டிய குறிப்புகளை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

author-image
WebDesk
New Update
istockphoto-1360244592-612x612 (1)

உடல் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம். இது வாழ்க்கை முறையில் கடுமையான மாற்றங்களை கொண்டு வருவதும் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்வதும் மட்டும் அல்ல அன்றாட வழக்கத்தில் சில தினசரி பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நீண்ட ஆயுளை ஆரோக்கியமாக பெற முடியும் என்கிறது ஆயுர்வேதம். அப்படி சொல்லும் குறிப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.

Advertisment

அதிகாலையில் எழுதல்

ஆயுர்வேதம், சூரிய உதயத்துக்கு 45 நிமிடங்களுக்கு முன்பான பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதற்குப் பரிந்துரைக்கிறது. இந்த நேரத்தில் தூய்மையான ஆக்ஸிஜன் உள்ளதால், சுவாசிக்கும் காற்றும் சுத்தமாக இருக்கும். இது கபம் நேரம் என்பதால், ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு, உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. மேலும் யோகா போன்ற பயிற்சிகள் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.

எப்போது உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்வது தசைகள், மூட்டுகள், உள் உறுப்புகளை வலுவடையச் செய்து, செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் மன நிம்மதி கிடைக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் 50% காலை 6 முதல் 10 மணி வரை செய்யப்படுவது சிறந்தது.

ஆயில் புல்லிங் 

ஆயில் புல்லிங் செய்வது பற்கள், ஈறுகள், வயிறு, சுவாசம், எலும்புகளில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. காலை நேரத்தில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை 15-20 நிமிடங்கள் வாயில் சுழற்றி, பின்பு வெளியேற்றி வெதுவெதுப்பான நீரில் வாய் கழுவ வேண்டும்.

Advertisment
Advertisements

நாக்கை சுத்தம் செய்யுங்கள்

நாக்கு நிறத்தின் வைத்து ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும். நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் ஆரோக்கியமானது. நாக்கின் மேல் வெள்ளை நிற மாவுகள் படிந்திருந்தால் அது உடலில் ஜீரண மண்டலம் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியே. நச்சை வெளியேற்றும் முயற்சிகளோடு நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான உணவு

ஆயுர்வேதத்தின் படி, பருவத்துக்கேற்ப உள்ள உணவுகளை எடுத்தால் செரிமானம் மேம்பட்டு சத்துகள் சிறப்பாக உறிஞ்சப்படும். குளிர்ந்த உணவுகள் தவிர்த்து வெதுவெதுப்பான நீரை பருகுவது வளர்சிதை மாற்றத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்தும்.

நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆயுர்வேதம் படி, தினமும் 1 டீஸ்பூன் பசு நெய் எடுத்தால் நினைவுத்திறன் மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உணவில் மஞ்சள், மிளகு, சோம்பு போன்ற சப்பைச் சுவைகள் சேர்க்க வேண்டும். உணவை சரியான நேரத்தில் எடுத்தால் உடல்நலம் மேம்படும்; இல்லையெனில் அது பாதிக்கக்கூடும்.

நன்கு தூங்க வேண்டும்

படுக்கைக்கு செல்லும் நேரம் முக்கியம். தினமும் இரவு 10 மணிக்கு முன் உறங்குவது நல்லது. கப உடல்தன்மையுள்ளவர்கள் அதிகம் தூங்குவார்கள்; பித்த, வாத உடல்தன்மையுள்ளவர்கள் குறைவாக தூங்குவார்கள். ஆனால், ஆழமான தூக்கத்திற்கு, படுக்கைக்கு 2 மணி நேரத்திற்கு முன் உணவு சாப்பிட வேண்டும்.

இதை கவனமாக பின்பற்றினால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக இருக்கலாம்!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: