Advertisment

குழந்தையின் கண்களில் மை வைக்கலாமா? அது நல்லதா?

பல இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கண்களை பெரிதாகவும் அழகாகவும் காட்ட கண்மை பயன்படுத்துகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
baby skin care

Is kajal safe for newborn babies (Photo Courtesy- Google)

குழந்தையின் கண்களில் கண்மை வைப்பது ஒரு பாரம்பரிய இந்திய கலாச்சாரமாகும், இது தீய கண்களை தடுக்கும் என்று நம்பப்படுகிறது. பல இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கண்களை பெரிதாகவும் அழகாகவும் காட்ட கண்மை பயன்படுத்துகின்றனர்.

Advertisment

இந்தியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கண்மை மீதான ஈர்ப்பு மாறாமல் உள்ளது, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பிறந்த குழந்தைக்கு அதை வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

கண்மை என்பது பழங்காலத்திலிருந்தே, கண்ணுக்கு அழகு சேர்க்கும் பொருளாக இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக எண்ணெய் அல்லது நெய்யின் எரிந்த எச்சமான கருப்பு சாம்பலை சேகரிப்பதன் மூலம் செய்யப்படுகிறது.

கண்மை பயன்படுத்துவது குழந்தையின் பார்வைக்கு நல்லது என்று பல பாரம்பரிய நம்பிக்கைகள் உள்ளன, ஆனால் இந்த கூற்றை ஆதரிக்கும் அறிவியல் ஆய்வு எதுவும் இல்லை.

இதுதவிர, தங்கள் குழந்தையின் கண்கள் பெரிதாகவும், பிரகாசமாகவும் தோன்றுவதற்கும் அதைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் கண்மை போடுவதன் மூலம் கண்ணை கூசும் சூரியனின் கடுமையான ஒளி மற்றும் தீய கண்களில் இருந்து குழந்தையை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

குழந்தையின் கண்களில் மை வைக்கலாமா?

ஒரு எளிய பதில், கூடாது. பல கலாச்சாரங்களில் கண்மை வைப்பது குழந்தைக்கு நன்மை பயக்கும் என்று நம்பினாலும், மருத்துவர்கள் இதை ஏற்கவில்லை. கண்மையில் ஈயம் உள்ளது, இது கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும்.

உண்மையில், கடையில் வாங்கப்படும் காஜல்களில் பெரும்பாலானவை ஈயத்தால் நிரப்பப்பட்டிருக்கும், இது உங்கள் குழந்தைக்கு அருகில் எங்கும் பயன்படுத்தக்கூடாது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பாதாம் காஜல் அல்லது ஹோம்மேட் காஜலை பயன்படுத்த நிறைய பெற்றோர்கள் உறுதியளிக்கிறார்கள், ஆனால் அதை உறுதிப்படுத்தக்கூடிய அறிவியல் ஆய்வு எதுவும் இல்லை. வீட்டில் காஜல் தயாரித்தாலும் அதில் கார்பன் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, உங்கள் கைகளை சரியாகக் கழுவவில்லை என்றால், அது குழந்தையின் கண்களுக்கு தொற்றுநோயைப் பரப்பும்.

நீங்கள் இன்னும் உங்கள் குழந்தைக்கு கண்மை வைக்க விரும்பினால், அதை காதுகள், உள்ளங்கால் அல்லது நெற்றியில் தடவலாம்.

இருப்பினும், குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன் கண்மையை ஈரமான துணியால் சரியாக துடைக்க வேண்டும், அதனால் குழந்தையை குளிப்பாட்டும் போது அது குழந்தையின் கண்கள் அல்லது மூக்கில் செல்லாமல் இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment