இரவில் தூங்குவதற்கு முன்பு இதையெல்லாம் முகத்தில் தடவினால் என்ன நடக்கும்????

காலையில எழும் போது அவர்களின் சருமம் மோசமான தன்மையுடன் காணப்படுகிறது என்று வருத்தப்படுவதுண்டு.

அழகு. இந்த வார்த்தை தரும் பொருள் ஏராளம். அதே சமயத்தில் அழகான  தோற்றம் என்பது  அனைவரையும் கவரக் கூடிய ஒன்று. முக அழகை விட உள்ள அழகு தான் முக்கியம் என்பார்கள். ஆனால் பார்த்த உடனே கண்ணுக்கு தெரிவது முக அழகு தான். பழகிய பின்பு தான் உள்ள அழகு பற்றி நமக்கு தெரிய வரும்.

காலையில் கல்லூரி செல்லும் பெண்களில் தொடங்கி, வேலை செல்பவர்கள், இல்லத்தரசிகள் என  அனைவரும் தங்கள் முகத்திற்காக நேரம் எடுப்பது இரவில் தான். இயற்கையாகவே இரவில்  முகத்திற்காக மனகெடுக்கும் எந்த ஒரு வேலைக்கும் உடனடியான பயன்கள் கிடைக்கும்.

நிறைய பேர்கள் காலையில எழும் போது அவர்களின் சருமம் மோசமான தன்மையுடன் காணப்படுகிறது என்று வருத்தப்படுவதுண்டு. அதை போக்க இதோ இப்படி செய்து பாருங்கள்.

1. ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

2. இரண்டு சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில் தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்.

3. வெள்ளரிக்காயை நறுக்கி பிறகு மசித்து கொள்ள வேண்டும். பிறகு தூங்குவதற்கு முன்பு உங்கள் சுத்தமான முகத்தில் இந்த பேஸ்ட்டை நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். பிறகு காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

4.இரவில் படுப்பதற்கு முன் உங்கள் முகத்தில் சிறிது அளவு பாதாம் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் மைல்டு க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும். நல்ல ஈரப்பதம் உள்ள மென்மையான சருமத்தை பெறலாம்

5. இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close